காந்தி மண்டபம், கன்னியாகுமரி

From Wikipedia, the free encyclopedia

காந்தி மண்டபம், கன்னியாகுமரி
Remove ads

காந்தி மண்டபம் தமிழ்நாட்டின் தென் எல்லை சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபம் 1956ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இம்மண்டபத்தில் உள்ள மையக் கூண்டு 79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருக்கும் இடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பாகும். இது காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்வையாளர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

Thumb
இரவில் காந்தி மண்டபம்
Remove ads

வெளி இணைப்புகள்

http://municipality.tn.gov.in/nagarcoil/abcity_Place%20of%20interest.htm பரணிடப்பட்டது 2013-01-05 at the வந்தவழி இயந்திரம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads