தாவர உடலமைப்பியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவர உள்ளமைப்பியல் அல்லது தாவர உடலமைப்பியல் என்பது தாவரப்பகுதிகளை வெட்டி அவற்றின் உள்ளமைப்பை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்தலைக் குறிக்கும், ஒரு செல் தாவரங்கள் எளிமையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன, இத்தகைய உயிரினங்களில் ஒரு தனி செல் வளர்ச்சி, உணவு தயாரித்தல்,. வளர்சிதைமாற்றம், இனப்பெருக்கம் முதலிய அனைத்து செயல்களையும் செய்து வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்கிறது, முற்போக்கு பரிணாம வளர்ச்சியின் காரணமாக சிக்கலான உடல் அமைப்புடைய உயிரினங்கள் உருவாயின, மேம்பாடு அடைந்த தாவரங்களில் வேர், தண்டு,. இலைகள் மற்றும் மலர்கள் அவற்றுக்குரிய பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன. இந்த வேலை பங்கீட்டின் காரணமாக தாவரத்தின் செல்கள் வேறுபாடு அடைந்து பல்வேறு திசுக்களை உருவாக்கியுள்ளன,[1][2][3]


தாவரத்தின் உள்ளமைப்பை அறிவதன் மூலம் பல்வேறு திசுக்கைளைப் பற்றி அறிய முடிகிறது. புறஅமைப்பின் அடிப்படையில். அமைப்பு மற்றும் செயல் ஆகியவற்றில் ஒத்துக் காணப்படுகின்ற செல்களால் ஆன ஒரு தொகுதி திசுவாகும். செயல் அடிப்படையில், அமைப்பால் வேறுபட்டிருந்தாலும், ஒரு பொதுவான பணியை மேற்கொள்கிற பல்வேறு வகை செல்களின் தொகுதியானது திசுவாகும், செல்கள் ஒன்று சேர்ந்து பலவகைத் திசுக்களை உருவாக்குகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திசுக்கள் ஒன்று சேர்ந்து திசுத் தொகுப்புகளை உருவாக்குகின்றன, பல்வேறு திசுத்தொகுப்புகள் ஒன்று சேர்ந்து உறுப்புகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு திசுவும் ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்கிறது, திசுக்களை இருவகைகளாகப் பிரிக்கலாம் - ஆக்குத் திசுக்கள் மற்றும் நிலைத்த திசுக்கள்.
Remove ads
காய்
காய் என்பது பழம் கனிவதற்கு முந்தைய நிலை ஆகும். தாவரங்கள் தங்கள் இனத்தைப் பெருக்கும் வண்ணம் விதைகளை உருவாக்குகின்றன. இவ்விதைகள் பெரும்பாலும் பழத்தின் உள்ளே இருக்கின்றன. காய்கள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும்.
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
