காரப்பாக்கம்

சென்னைப் புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

காரப்பாக்கம் (Karapakkam) தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். காரப்பாக்கம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[1] தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் அல்லது பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்படும் ராஜீவ் காந்தி சாலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் காரப்பாக்கம், நாடு ...

சென்னைப் பெருநகரப் பகுதியில் அங்கமாயுள்ள இச்சிற்றூரில் அமைந்துள்ள பல தகவல் தொழினுட்பம் மற்றும் தகவல் தொழினுட்பம் சார் சேவை நிறுவனங்களால் இது பரவலாக அறியப்பட்டு வருகிறது. இச்சிற்றூரின் மக்கள்தொகை ஏறத்தாழ 4,500 ஆகும். இங்கு சத்யம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஆக்சன்ச்சர் இந்தியா, காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம், போட்டான் இன்போடெக் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் ராஜீவ் காந்தி சாலையை ஒட்டி அமைந்துள்ளன.

இந்த நிறுவனங்களில் பணிபுரிவோரை நோக்கி மெக்டொனால்ட், பிட்சாஹட், ஹாட்சிப்ஸ், தாபா, ஆந்திரா மெஸ், பாசிகின் இராபின்சு போன்ற உயர்தட்டு விரைவு உணவகங்களும் தோன்றியவண்ணம் உள்ளன. ரிவர்சைடு மால் எனப்படும் பல்லங்காடி வளாகமும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சிற்றூரில் பஞ்சாயத்து துவக்கப்பள்ளியும் அரசு உயர்நிலைப் பள்ளியும் ஹிந்துஸ்தான் இன்டர்னேஷனள் -CBSE பள்ளியும் உள்ளன. சுனாமி பாதிப்பு மற்றும் முதியோருக்கான அன்னை பாத்திமா இல்லமும் இங்குள்ளது.

திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. அருள்மிகு திரௌபதியம்மன் கோவில், அருள்மிகு கங்கையம்மன் கோவில், அருள்மிகு வேந்தவரசியம்மன் கோவில், அருள்மிகு காளியம்மன் கோவில் என்ற இந்துக் கோவில்களும் மஜ்சித் அல் அன்வர் என்ற இசுலாமிய வழிபாட்டுத் தலமும் இங்குள்ளன.

தங்கவேலு பொறியியல் கல்லூரி, கேசிஜி தொழினுட்பக் கல்லூரி என்பன இங்குள்ள கல்லூரிகளாகும். அரவிந்த் என் பெயருள்ள திரையரங்கும் இங்குள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads