காரி கிழார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காரி கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 6 [1] எண் கொண்ட பாடலாக உள்ளது.
காரி என்னும் சொல் நஞ்சைக் குறிக்கும். அது ஆகுபெயராய் நஞ்சுண்ட சிவபெருமானையும் குறிக்கும். இவரது பெயர் சிவபெருமானை அழைக்கும் பெயர்.
பாடலில் இவர் சொல்லும் கருத்துகள் புராண நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன.
பாடல் சொல்லும் செய்திகள்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
'தண்டா ஈகைத் தகைமாண் வழுதி' என இவன் போற்றப்படுவதால் இவன் சிறந்த கொடைவள்ளல்களில் ஒருவன் எனத் தெரியவருகிறது.
வாழ்த்தியல்
தண்கதிர் மதியம் போல மற்றவர்களுக்குக் குளுமையாகவும், ஞாயிற்றின் ஒளியைப்போல மற்றவர்களுக்கு விளக்கமாவும் வாழ்வாயாக எனப் புலவர் வழுதியை வாழ்த்துகிறார்.
செவியறிவுறூஉ
காதுகளில் தைக்கும்படி அறிவுறுத்துவது செவியறிவுறூஉ. புலவர் அரசன் காதுகளில் உறைக்கும்படி சில செய்திகளை இப்பாடலில் கூறுகிறார்.
- பகை வென்று கொண்டுவந்த நன்கலங்களை பரிசில் பெற வருவொர்க்குச் சீர்வரிசைகளாக நல்குக.
- முனிவர் முக்கண் செல்வர் (சிவபெருமான்) திருமேனி நகர்வலம் வரும்போது உன் வெண்கொற்றக் குடை பணியட்டும்.
- நான்மறை முனிவர் கையேந்தும்போது உன் தலை வணங்கட்டும்.
- பகை நாட்டை அழித்துத் தீயிட்டுக் கொளுத்தும் புகையில் உன் பூ மாலை வாடட்டும்.
- மங்கையர் ஊடல் நீண்டு துனியாக மாறும் காலத்தில் உன் வெகுளி தணியட்டும்.
பொருண்மொழிக் காஞ்சி
நன்னெறியைப் பொருண்மொழி என்பது சங்ககால வழக்கு. செவியறிவுறூஉ பகுதியில் புலவர் அரசர்க்கு நன்னெறிகளாகக் கூறும் செய்திகளைப் பொருண்மொழிக் காஞ்சி என்றும் கொள்கின்றனர்.
புராணச் செய்தி
- 'கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின் நீர்நிலை நிவப்பு'
உலகின் கட்டு 3 நிலைகளாக அடுக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்கின் இடைநில் உள்ளது நாம் வாழும் உலகம். கீழே உள்ளது நீர்நிலை ஓங்கியுள்ள உலகம்.
- 'மேலது ஆனிலை உலகம்'
மேலே உள்ளது ஆன்மாக்கள் வாழும் உலகம்.
இங்கெல்லாம் முதுகுடுமிப் பெருவழுதியின் புகழ் பரவ வேண்டும் என்று இப்புலவர் வாழ்த்துகிறார்.
பழந்தமிழ்
- ஞமன்ன் = எமன்
- தொடுகடல் = வங்கக் கடலின் பழங்காலத் தமிழ்ப் பெயர்
- பற்றலியரோ = பற்றுக
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads