கார்கி வசக்னவி
பண்டைய கால இந்திய மெய்யியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்கி வசக்னவி (Gargi Vachaknavi) (பிறப்பு கிமு 9 முதல் 7 ஆம் நூற்றாண்டு) ஓர் பழங்கால இந்திய தத்துவவாதியாவார். வேத இலக்கியத்தில், இவர் ஒரு சிறந்த இயற்கை தத்துவஞானியாகவும், [1] [2] வேதங்களின் புராகவும், [3] பிரம்ம வித்யா பற்றிய அறிவு கொண்ட ஒருவராகவும் அறியப்படுகிறார். [4] பிரகதாரண்யக உபநிடதத்தின் ஆறாவது மற்றும் எட்டாவது பிராமணத்தில், இவர் பிரம்ம வேள்வியில் பங்கேற்றதால் இவருடைய பெயர் முக்கியமானது. வேதகால பேரரசான விதேக நாட்டின் அரசன் சனகனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தத்துவ விவாதத்தில், இவர் ஆன்மா சம்பந்தமான குழப்பமான கேள்விகளுடன் யாக்யவல்க்கியருடன் விவாதத்தில் ஈடுபட்டார் . [1] இவர் இருக்கு வேதத்தில் பல பாடல்களை எழுதியதாகவும் கூறப்படுகிறது. [5] இவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருந்தார். பாரம்பரிய இந்துக்களால் வணங்கப்பட்டாள் . [6] [7]

Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
கார்கி, வச்சக்னு முனிவரின் மகளாவார். கார்க முனிவரின் வம்சாவளியில் (கி.மு. 800-500 ) வந்த தந்தையின் பெயரால் கார்கி வச்சக்நவி என்று பெயரிடப்பட்டார்.[8] [9] சிறு வயதிலிருந்தே, இவர் மிகவும் அறிவார்ந்தவராக இருந்தார். சிறு வயதிலிருந்தே இவர் வேத நூல்களில் மீது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். வேதங்கள் , உபநிடதங்களில் அதிக அறிவு பெற்றவராக இருந்துள்ளார். மேலும், மெய்யியலில் நன்றாகத் தேர்ச்சி பெற்றிந்தார். மற்ற தத்துவவாதிகளுடன் அறிவுசார் விவாதங்களையும் நடத்தினார்.[10]
Remove ads
யாக்யவல்கியருடன் விவாதம்
பிரகதாரண்யக உபநிடதத்தின் படி, விதேக இச்சியத்தின் மன்னர் சனகன் ஒரு இராசசூய வேள்வியை நடத்தினார். இதில் அனைத்து கற்றறிந்த முனிவர்கள், மன்னர்கள், இந்தியாவின் இளவரசர்கள் ஆகியோரை பங்கேற்க அழைத்தார். சனகர் ஒரு அறிஞராக இருந்ததால், கற்றறிந்த முனிவர்களின் பெரும் கூட்டத்தால் ஈர்க்கப்பட்டார். பிரம்மத்தைப் பற்றிய அதிகபட்ச அறிவைக் கொண்ட ஒரு அறிஞரைத் தேர்ந்தெடுக்க நினைத்தார்.
குண்டலினி யோகக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால், கூடியிருந்த கூட்டங்களில் தான் மிகவும் ஆன்மீக அறிவாளி என்பதை அறிந்த யாக்யவல்கியர், தனது சிஷ்யரான சம்ஸ்ரவாவை மாட்டு கூட்டத்தை தனது வீட்டிற்கு விரட்டும்படி கட்டளையிட்டார். இது ஒரு விவாதத்தில் போட்டியிடாமல் அவர் பரிசைப் பெறுவதாக அறிஞர்கள் உணர்ந்ததால் அவர்கள் கோபமடைந்தனர். சில உள்ளூர் பண்டிதர்கள் (அறிஞர்கள்) தங்களது அறிவு பற்றி உறுதியாக தெரியாததால் அவருடன் விவாதத்திற்கு முன்வரவில்லை. எவ்வாறாயினும், எட்டு புகழ்பெற்ற முனிவர்கள் அவரை விவாதத்திற்கு அழைத்தனர். அறிஞர்கள் கூடியிருந்த சபையில் ஒரே பெண்ணாக கார்கியும் இருந்தார். இவர், அவருடன் பல விவாதங்களில் ஈடுபட்டார். ஆன்மா, நடைமுறைச் சூழ்நிலை, உலகில் இருக்கும் சூழல், அனைத்து இருப்பின் தோற்றம் பற்றியும் விவாதித்தார்.
பிறகு கார்கி இறுதியாக "பிரம்மம் என்றால் என்ன?" என்ற ஓர் கேள்வியைக் கேட்டார். யாக்யவல்கியர் அதற்கு பதிலளித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.[11][12] இருப்பினும், விவாதத்தின் முடிவில் இவர் யாக்யவல்கியரின் உயர்ந்த அறிவை ஒப்புக்கொண்டார்.[13]
Remove ads
பிற்கால வாழ்வு
கார்கி, உபநிடதத்தில் இடம்பெறும் பெண்களில் முக்கியமானவர்களான வடவ பிரதிதேயி, சுலபா மைத்ரேயி ஆகியோருடன் குறிப்பிடப்படுகிறார். [14] வேதகாலத்து மனிதர்களைப் போல் வேதங்களிலும், உபநிடதங்களிலும் நன்கு அறிந்தவராகவும், ஆண்-தத்துவவாதிகளிடம் விவாதங்களில் நன்கு போட்டியிடக் கூடியரவாரகவும் இருந்தார் . [15] இவருடைய பெயர் ஆசுவலயானாவின் கிருக சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [16] இவர் ஒரு முன்னணி அறிஞராக இருந்தார். அவர் கல்வியைப் பரப்புவதற்காக தனது சொந்தப் பங்களிப்புகளைச் செய்தார். [10]
சாந்தோக்கிய உபநிடதத்தில் இவரது தத்துவக் கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. [1] கார்கி, பிரம்மவாதினியாக, இருக்கு வேதத்தில் பல பாடல்களை இயற்றினார் (X 39 இல் V.28). இது அனைத்து இருப்பின் தோற்றத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. [5] [17] யோகா பற்றிய ஒரு உன்னதமான உரையான யோக யக்ஞவல்க்யா என்பது கார்கிக்கும் முனிவர் யாக்யவல்கியருக்கும் இடையிலான உரையாடலாகும். [18] மிதிலையின் மன்னர் சனகனின் அரசவையில் இடம் பெற்றிருந்த நவரத்தினங்களில் ஒருவராக இவர் கௌரவிக்கப்பட்டார். [1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads