கார்ட்டிசால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்ட்டிசால் (cortisol) என்பது அண்ணீரகச் சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு ஸ்டீராய்டு இயக்குநீர் ஆகும். இது ஒரு குளுக்கோகார்டிகாய்டு ஆகும். இது மனிதஉடலின் உட்சூழல் (internal environment) உளைச்சலுக்கு உள்ளாகும் போது சுரக்கப்படுகிறது.
கார்டிசோல் மருந்தாகப் பயன்படுத்தப்படும்போது, ஐட்ரோகார்டிசோன் என அழைக்கப்படுகிறது. மனிதர்களில் அண்ணீரகச் சுரப்பி அகணியின் தசைக்கட்டு மண்டலத்தினால் இது உருவாக்கப்படுகிறது.[1] மன அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை செறிவின்போது கார்டிசால் வெளியிடப்படுகிறது. குளுக்கோசு புத்தாக்கத்தின் மூலமாக இரத்த குளுக்கோசை அதிகரித்தல்,உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், கொழுப்பு, புரதம், கார்போவைதரேட்டு ஆகியவற்றின் வளர்சிதைமாற்றத்திற்கு உதவுதல்,[2] எலும்புருவாக்கத்தைக் குறைத்தல்[3] ஆகியன இதன் முக்கியப் பணிகள் ஆகும்.
Remove ads
சுகாதார விளைவுகள்
வளர்சிதை மாற்றம்
ஆரம்பகால உண்ணாநிலைக் காலத்தில் கார்டிசோல் குளுக்கோசு புத்துருவாக்கம் மற்றும் மன இறுக்கம், அழற்சிக்கு எதிரான செயற்பாடுகளைத் தூண்டுகிறது. கார்டிசால் கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோசன், குளுக்கோசு -1-பாசுபேட்டு மற்றும் குளுக்கோசாக சிதைவடைவதில் ஒரு முக்கியமான, ஆனால் மறைமுகமான பாத்திரத்தை வகிக்கிறது. இத்தகுச் செயற்பாடுகளை குளுக்ககான் மீதான பணிப்புத் தாக்கத்தின் மூலம் கார்டிசால் நிறைவேற்றுகிறது. கிளைகோசன் சிதைவின் மீது எபிநெப்பிரின் இயக்குநீர் தாக்கத்தினை ஏற்படுத்த உதவும் கிளைகோசன் பாசுபோரிலேசு என்னும் நொதியைத் தூண்டுவதன் மூலம் கார்டிசால் கிளைகோசன் சிதைவை எளிதாக்குகிறது.[4][5] உண்ணாநிலையின் பிற்பகுதியில், கிளைகோசன் உருவாக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் கார்டிசாலின் செயல்பாடு சிறிது மாறுபடுகிறது. இதன் விளைவாக புற திசுக்களால் பயன்படுத்தப்படாத குளுக்கோசை (பட்டினியின்போது உபயோகப்படுத்துவதற்காக) கிளைகோசனாக மாற்றி கல்லீரலில் சேமிப்பதற்கு உதவுகிறது.
கார்டிசால் அளவுகள் அதிகளவில் நீடித்திருப்பது, புரதங்களின் சிதைவு மற்றும் தசை (திசு) அழிவுறல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.[6] கார்டிசோல் கொழுப்புச் சிதைவினை ஊக்குவிக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்றாலும், சில நேரங்களில் கார்டிசோல் கொழுப்புச் சிதைவினை ஓரளவிற்குத் தடுக்கலாம் என அறியப்படுகிறது.[7]
நோயெதிர்ப்புத்திறன்
கார்டிசால் உடலில் அழற்சியைத் தூண்டும் பொருட்களின் வெளியீட்டைத் தடுக்கிறது. மிகவும் தூண்டப்பட்ட எதிர்ப்பி உருவாகும் (உதாரணமாக, அழற்சி, முடக்குவாத நோய்கள், ஒவ்வாமை) நிலைகளுக்குச் சிகிச்சை செய்வதில் கார்டிசால் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பின் செயற்பாடுகளை கார்டிசோல் வலுவிழக்க செய்யலாம். இன்டெர்லியூக்கின்-2-ஐ உருவாக்கும் "டி" செல்களை இன்டெர்லியூக்கின்-1-க்கு ஏற்புத்தன்மை இல்லாமல் செய்வதன் மூலம், "டி" செல் வளர்ச்சி காரணி இன்டெர்லியூக்கின்-2 உற்பத்தி செய்வதைத் தடுத்து[8], இச்செல்களின் பெருக்கத்தினைத் தடுக்கிறது. கார்டிசால் இன்டெர்லியூக்கின்-1-ன் மீது எதிர்ப்பின்னூட்ட விளைவினைக் கொண்டுள்ளது.[9]
நோயெதிர்ப்பு அமைப்பில் பயன்படுத்துவதற்காக (கொலாசன் மற்றும் எலாஸ்டின் பிணைப்புகளை உருவாக்கும் லைசில் ஆக்சிடேசு போன்ற) பல செப்பு உலோகத்தைப் பயன்படுத்தும் நொதிகளை கார்டிசால் தூண்டுகிறது[10]:337. குறிப்பாக, நோயெதிர்ப்பில் பாக்டீரியாக்களை அழிக்கப் பெருமளவு பயன்படுத்தப்படும் சூப்பராக்சைடு டிஸ்மியூட்டேசு என்னும் நொதியை கார்டிசால் தூண்டுகிறது.[11]
Remove ads
மற்ற விளைவுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads