கார்த்திகை திருநாள் லட்சுமி பாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்த்திகை திருநாள் லட்சுமி பாய் (Karthika Thirunal Lakshmi Bayi) இவர் திருவாங்கூரின் கடைசி ஆளும் மகாராஜா, சித்திரை திருநாள் பலராம வர்மன் மற்றும் அவரது வாரிசான உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் ஆகியோரின் ஒரே சகோதரியாவார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் நிலவிய மரபுரிமையான மருமக்கதாயம் முறையின் கீழ், இவரது குழந்தைகள் தான் அரியணைக்கு வாரிசுகளாவர். எனவே இவர் திருவிதாங்கூர் அரசவையில் மகாராஜாவின் மனைவிகளை விட உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தார். மேலும் இவர் தனது சொந்த உரிமையில் ஆற்றிங்கல்லின் ராணி என்றும் அழைக்கப்பட்டார். 2013 ஆம் ஆண்டில், இவரது ஒரே மகன் திருவிதாங்கூரின் மகாராஜா என்ற பெயரில் தனது மாமாக்களுக்குப் பின் முறையாக வாரிசானர். மேலும் அவர் மூலம் திருநாள் ராம வர்மன் என்று அழைக்கப்படுகிறார் .
Remove ads
ஆரம்ப ஆண்டுகள்
கிளிமானூரைச் சேர்ந்த ராணி சேது பார்வதி பாய் மற்றும் ரவி வர்மா கோயி தம்புரான் ஆகியோரின் ஒரே மகளாகப் பிறந்த இவர் இராணுவ அதிகாரி ஜி. வி. ராஜா என்பவரை மணந்தார். ஒன் இந்தியா ஆன்லைன் என்ற நாளிதழின் படி, இவர் சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்தார். இவர், ஒரு திறமையான நடனக் கலைஞரும், பாடகரும் மற்றும் மொழியியலாளருமாவார்.[1] மரபுக்கு இணங்க, மூத்த தம்புரான் என்று அழைக்கப்படும் ஆற்றிங்கல் அரண்மனையின் தலைவராகவும் இருந்தார்.

சமசுகிருத அறிஞரும் மற்றும் கிளிமானூர் கோவிலகமத்தின் பூரம் திருநாள் ரவி வர்மா கொச்சு கோயி தம்புரான், மற்றும் திருவிதாங்கூரைச் சேர்ந்த மகாராணி சேது பார்வதிபாயி ஆகியோரின் ஒரே மகளாக 1916 செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்களால் இவர் கல்வி கற்றார். இவர் மலையாளம், சமசுகிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். தனது குழந்தை பருவத்திலிருந்தே நடனம் மற்றும் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரது நலன்களை உணர்ந்து, அவரது அண்ணன் மகாராஜா சித்திரை திருநாள், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரை இவரது இசை ஆசிரியராக நியமித்தார். 1933 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், கார்த்திகை திருநாள் தனது குடும்பத்தினரிடமிருந்து தனது தாயுடன் கடல் பயணத்தை மேற்கொண்ட முதல் பெண்ணானார். இவர், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 1935 அகில இந்திய மகளிர் மாநாட்டிலும் பங்கேற்றார்.[2]
Remove ads
திருமணம்
கார்த்திகை திருநாளுக்கு 16 வயதை எட்டியவுடன், இவருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக, கோயி தம்புரான்கள் திருவிதாங்கூர் இளவரசிகள் மற்றும் ராணிகளுக்கு மணமகனாக தேர்வு செய்யப்படுவார்கள்.[3] உத்திராடம் திருநாளின் கூற்றுப்படி, மகாராஜா சித்திரை திருநாள் மற்றும் சேது பார்வதி பாய் ஆகியோர் கோயில் தம்புரான்களை புறக்கணித்து, பூஞ்சார் அரண்மனையைச் சேர்ந்த பி. ஆர். கோதவர்மா ராஜா என்பவரை திருமணம் செய்து வைத்தனர்.[4]

இந்த தம்பதியினருக்கு அவிட்டம் திருநாள் ராம வர்மன் (1938-1944, வாத நோய் காரணமாக தனது ஆறு வயதில் இறந்தார்) பூசம் திருநாள் கௌரி பார்வதி பாய் (1941), அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் (1945) மற்றும் மூலம் திருநாள் ராம வர்மன் (1949) ஆகியோர் இவர்களின் குழந்தைகளாகப் பிறந்தனர்.[7][8] இவர், தற்போது திருவிதாங்கூர் மகாராஜா மற்றும் திருவிதாங்கூர் அரசக் குடும்பத்தின் தலைவர் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பாதுகாவலாக இருக்கிறார்.[9] மறைந்த அவிட்டம் திருநாளின் நினைவாக, மகாராஜா சித்திரை திருநாள் பலராம வர்மன் திருவனந்தபுரத்தில் எஸ் ஏ டி என்ற ஒரு மருத்துவமனையை கட்டினார்.[10][11]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads