கார்பாக்சிலேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கார்பாக்சிலேட்டு (Carboxylate) என்பது கார்பாக்சிலிக் அமிலத்தின் ஒரு உப்பு அல்லது எசுத்தர் ஆகும். கார்பாக்சிலேட்டு உப்புகள் M(RCOO)n,என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. இங்குள்ள M தனிமத்தையும் n 1, 2,...என எண்களையும் குறிக்கின்றன. இதேபோல கார்பனேட்டு எசுத்தர்கள் RCOOR′ என்ற பொதுவாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. இங்குள்ள R மற்றும் R’ என்பவை கரிமக் குழுக்களாகும். R′ ≠ H. என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கார்பாக்சிலெட்டு அயனியானது கார்பாக்சிலிக் அமிலத்தின் (RCOO−.) இணை காரமாகும். இது எதிர்மின் சுமையைப் பெற்றிருக்கும் ஓர் அயனியாகும்.


Remove ads
கார்பாக்சிலேட்டு அயனியின் ஒத்திசைவு நிலைப்புத்தன்மை
கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்ககால்களைக் காட்டிலும் விரைவாக பிரிகையடைகின்றன. இப்பிரிகையின் போது கார்பாக்சிலேட்டு எதிர்மின் அயனியாகவும் நேர்மின்சுமை கொண்ட ஐதரசன் அயனியாகவும் பிரிகையடைகிறது. பொதுவாக இப்பிரிகை விளைபொருட்களை ஆல்காக்சைடுகள் மற்றும் புரோட்டான்கள் என்பர்.ஏனெனில் கார்பாக்சிலேட்டு அயனி ஒத்திசைவு மூலமாக நிலைப்புத்தன்மையடைகிறது. கார்பாக்சில் குழுவின் புரோட்டான் நீக்கத்திற்கு பின்னர் விடப்படும் எதிர்மின் சுமை இரண்டு எதிர் மின்னூட்ட ஆக்சிசன் அணுக்களுக்கு இடையில் இருக்கும் ஒத்திசைவுக் கட்டமைப்பில் பரவலாக்கப்படுகிறது.
இரண்டு ஆக்சிசன் அணுக்களும் குறைவான வலிமையுள்ள எதிர்மின் சுமையைப் பெற்றுள்ளன என்பதே எலக்ட்ரான் திரள் பரவலாக்கப்படுகிறது என்பதன் பொருள் ஆகும். இதனால் நேர்மின் சுமை கொண்ட புரோட்டானும் குறைவாகவே கார்பாக்சிலேட்டு குழுவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. எனவே கார்பாக்சிலெட்டு அயனி அதிக நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.மாறாக ஒரு ஆல்காக்சைடு ஒருமுறை உருவானவுடன் ஆக்சிசன் அணுவில் அதிக எதிர்மின் சுமையைப் பெற்றிருக்கும். இதனால் புரோட்டான் விடுபடுவது கடினமாகிறது. எனவேதான் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்ககால்களைக் காட்டிலும் குறைவான கார காடித்தன்மை எண் (pH) மதிப்பைக் கொண்டுள்ளன. கரைசலில் அதிக எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றும் pH மதிப்பு குறைவாகவும் பெற்றுள்ளன [1]
Remove ads
உதாரணங்கள்
- பார்மேட்டு அயனி, HCOO−
- அசிட்டேட்டு அயனி, CH3COO−
- லாக்டேட்டு ion, CH3CH(OH)COO−
- ஆக்சலேட்டு அயனி, (COO)2−
2 - சிட்ரேட்டு அயனி, C
3H
5O(COO)3−
3.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads