கார்பேத்திய மலைகள்

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மலைத்தொடர்கள் From Wikipedia, the free encyclopedia

கார்பேத்திய மலைகள்map
Remove ads

கார்ப்பேத்திய மலைகள் (Carpathian Mountains) அல்லது கார்ப்பேத்தியம் (Carpathians, /kɑːrˈpθiənz/) நடுவ, கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 1,500 km (932 mi) நீளமான வட்டவில்லையாகவுள்ள மலைத் தொடர் அமைப்பாகும். இவை ஐரோப்பாவில், 1,700 km (1,056 mi) நீளமுள்ள எசுக்காண்டினாவிய மலைகளை அடுத்து) இரண்டாவது-நீளமான மலைத்தொடராகும்.

விரைவான உண்மைகள் கார்ப்பேத்தியம், உயர்ந்த புள்ளி ...

ஐரோப்பாவின் பெருமளவிலான பழுப்புநிறக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய மான்கள், லின்க்ஸ் பூனைகள் இம்மலைத்தொடர்களில், மிகக் கூடுதலாக உருமேனியாவில், வாழ்கின்றன.[1][2][3] தவிரவும் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு தாவரவினங்கள் இங்குள்ளன.[4] கார்ப்பேத்தியத்திலும் அதன் மலையடிவாரங்களிலும் பல வெந்நீர், கனிம நீரூற்றுகள் உள்ளன; உருமேனியாவில் மட்டுமே ஐரோப்பாவின் மூன்றில் ஒருபங்கு நீரூற்றுகள் உள்ளன.[5][6] இதேபோல உருமேனியாவில், உருசியாவை அடுத்து, இரண்டாவது பெரிய புவிப்பரப்பு கன்னிக் காடுகள் அமைந்துள்ளன; 250,000 எக்டேரில் (65%) பரந்துள்ள இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பத்தேயத்தில் அமைந்துள்ளன.[7] தெற்கு கார்ப்பேத்தியத்தில் ஐரோப்பாவின் பிளவுபடாத மிகப் பெரிய வனப்பகுதி உள்ளது.[8]

கார்ப்பத்தியம் வடமேற்கில் செக் குடியரசில் (3%) தொடங்கி சிலோவாக்கியா (17%), போலந்து (10%), அங்கேரி (4%), உக்ரைன் (10%) செர்பியா (5%) மற்றும் தென்கிழக்கிலுள்ள உருமேனியா (50%) வரை வட்டவிலையாக அமைந்துள்ளது.[9][10][11][12]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads