காலியம்(III) ஐதராக்சைடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காலியம்(III) ஐதராக்சைடு (Gallium(III) hydroxide) என்பது Ga(OH)3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்டவேதியியல் சேர்மமாகும். காலியம் உப்புகளுடன் (Ga3+) அமோனியாவைச்[1] சேர்க்கும் போது கூழ்மம் போன்ற இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் அரியவகை கனிமத் தாதுவான சோவன்சைட்டில் எண்முகவடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட காலியம் அணுக்கள் காணப்படுகின்றன.[2] காலியம் ஐதராக்சைடு அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். வலுவான அமிலச்சூழலில் காலியம் அயனி, Ga3+ உருவாகிறது. அதேபோல வலிமையான காரச்சூழலில் Ga(OH)4− அயனி உருவாகிறது. காலியம் ஐதராக்சைடின் உப்புகள் சிலசமயங்களில் காலேட்டுகள் [1] என அழைக்கப்படுகின்றன.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads