கால்பந்தாட்டச் சட்டங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காற்பந்தாட்ட சட்டங்கள் (Laws of the Game [1]) காற்பந்தாட்டத்தை வரையறுக்க உதவும் விதிகள் ஆகும். இந்த சட்டங்கள் முதன்முதலில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக காற்பந்துக் கழகம் 1848இல் கேம்பிரிட்ச்சின் பார்க்கரின் பொதுவிடத்தில் வரையறுக்கப்பட்டு, அக்டோபர் 26, 1863இல் கால்பந்துச் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அச்சமயத்தில் எஃப்ஏயின் கௌரவ செயலராக இருந்த ஈ.சி. மோர்லி "இவை மிகவும் எளிமையாக இருப்பதுடன் ஆட்டத்தின் உண்மையான கொள்கைகளைத் தழுவியுள்ளன" எனக் கூறினார். பார்க்கர்ஸ் பிளேசு எனப்படும் இந்த மைதானம் காற்பந்தாட்டத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது.

இச்சட்டங்கள் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தினால் எழுதப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இவ்விளையாட்டினை கட்டுப்படுத்தும் அமைப்பான பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அச்சிட்டு வெளியிடுகிறது. இச்சட்டங்கள் ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டிய விளையாட்டாளர்களின் எண்ணிக்கை, ஆட்டத்தின் கால அளவு, ஆட்ட மைதானம் மற்றும் பந்தின் அளவுகள், எவ்வகையான, தன்மையான முறைமீறல்களுக்கு ஆட்டநடுவர்கள் தண்டனை வழங்கலாம், பெரும்பாலும் தவறாக புரியப்படும் ஆஃப்சைடு சட்டம், மற்றும் ஆட்டத்தை வரையறுக்கும் பல சட்டங்களை குறிப்பிடுகின்றன.

Remove ads

தற்போதைய ஆட்டச் சட்டங்கள்

தற்போது நிலுவையிலிருக்கும் காற்பந்தாட்டச் சட்டங்கள் பதினேழு தனித்தனி சட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு சட்டத்திற்கும் பல விதிகளும் வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன:[1]

இன்று, இந்த 17 சட்டங்களும் ஏ5 அளவுத்தாள்களில் (140 x 215 மிமீ) 50 பக்கங்களுக்குள்ளான கையேட்டில் அடங்குகின்றன. 1997இல் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பில் பல பத்திகள் நீக்கப்பட்டு பல விதிகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்கள் ஆங்கிலப் பொதுச் சட்டப் பாணியில் எழுதப்பட்டுள்ளன. இவை வழிகாட்டல்களாகவும் கொள்கை நோக்கங்களாகவும் அமைந்துள்ளன. செயற்படுத்தல், மரபு மற்றும் ஆட்ட நடுவர்களின் செயலாக்கங்களால் நிலைநிறுத்தப்படுகின்றன.

ஆட்ட நடுவர்கள் தங்கள் திறனாய்வு மற்றும் இயல்பறிவு கொண்டு இச்சட்டங்களை பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றனர்.

Remove ads

மேற்சான்றுகள்

நூற்றொகை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads