காளிகேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காளிகேசம் (Kalikesam) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி காட்டுயிர் புகலிடத்தில் கீரிப் பாறையருகே அமைந்துள்ளது.[1] சுற்றுச்சூழல் பூங்காவான இப்புகலிடத்தின் ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு காளிகோவில் அமைந்துள்ளது.[2]
Remove ads
அமைவிடம்
இது மேற்குத் தொடர்ச்சி மலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வடபகுதியில் நாகர்கோவிலிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.[3] நாகர்கோவிலில் இருந்து காளிகேசத்திற்கு பேருந்துகள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அவை செல்கின்றன. நாகர்கோவிலிலிருந்து 4, 4ஏ என்ற எண்ணிட்ட பேருந்துகளும் மார்த்தாண்டத்திலிருந்து 330 என்ற எண்ணிட்ட பேருந்தும் இவ்வூருக்குச் செல்கின்றன. பௌர்ணமி நாட்கள் மற்றும் பிற தமிழ் பண்டிகைக் காலங்கள் போன்ற பண்டிகைக் காலங்களில் முழு நாட்களுக்கும் இங்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Remove ads
வசதிகள்
வனப்பகுதிகளுக்குள் சட்டவிரோத செயல்களை தவிர்க்கும் வகையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. காளிகேசம் கோவிலுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல நாகர்கோவில் வன அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads