காளிதாஸ் ராய்

இந்தியக் கவிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

காளிதாஸ் ராய் (Kalidas Roy 1889-1975) தாகூர் காலத்திய வங்காள இலக்கியக் கவிஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். வைணவக் கவிஞரான லோசன் தாசின் வம்சாவளியில் வந்தவர். இவரது தந்தை ஜோகெந்திரநாத் ராய் ஆவார். அரபு மற்றும் பாரசீக மொழிகளில் அவர் எழுதினார்.

பணி

கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பெர்ஹாம்பூர் கல்லூரியில் இருந்து தனது முதல் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவத்தில் எம்ஏ பட்டம் பெற்றார்.[1]

ராய் பாரிஷா உயர்நிலை பள்ளி (கொல்கத்தா) மற்றும் மித்ரா நிறுவனம், கொய்யுவோவின் பொவனிப்பூர் கிளை, கொல்கத்தாபோன்ற (தலைமை ஆசிரியராக) கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்தார்.

வங்காள இலக்கியத்தின் தாகூர் காலக் கவிஞர்களில் காளிதாஸ் ராயும் ஒருவராவார். அவருடைய கவிதைகளில் வைஷ்ணவக் கருத்துக்களின் தாக்கம் கொண்டிருந்தன. அவர் 19 கவிதை நூல்கள் எழுதினார். அவருடைய புகழ்பெற்ற கவிதைகளுள் ஆசிரியர் மாணவர்களுடனான தொடர்பு பற்றிய ”சாத்திரதாரா”வும் “திரிரத்னா”வும் அடங்கும் அவர் கவிதைகள் மட்டுமல்லாது, சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்தார். மேலும் புத்தகங்களின் விமர்சன மதிப்பீடுகளும் செய்தார்.

25 அக்டோபர் 1975 இல் அவர் இறந்தார்.

Remove ads

நூலகம்

அவருடைய கவிதைகளில் சில:

  • பர்னபட்
  • ரிது மங்கள்
  • கிஷோலய்
  • பிரோஜொபெனு
  • போல்காலி
  • லாஜன்ஜலி
  • பல்லாரி
  • அகரன்
  • அகரானி

விருதுகள்

  • கவிஷேகர் (முதன்மைக் கவிஞர், 1920), பாங்கியா சாகித பரிஷத், ரங்க்பூர்
  • கல்கத்தா பல்கலைக் கழகத்திலிருந்து ஜகத்தரணி ஸ்வர்ண பதக் (தங்க பதக்கம், 1953)
  • கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சரோஜினி சுவர்ண பதக் (தங்க பதக்கம்)
  • ஆனந்த பசார் குழுமம் வழங்கிய ஆனந்த் புரஸ்கார் (1963)
  • ரவீந்திர புரஸ்கார் (1968), அவரது கவிதைக்காக "பூர்ணகுதி"
  • விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தேசிகொட்டம் (1970)
  • கௌரவ. டி.லிட். (1972) ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்
  • கௌரவ டி.லிட். (1976, இறப்புக்குப் பின்) பர்த்வான் பல்கலைக்கழகம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads