காவிரி (நீச்சல்மகள்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காவிரி என்பவள் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நீச்சல்மகள்.

கழார் முன்துறை ‘பரதவர் கோமான் பல்வேல் மத்தி’க்கு உரியது. - பரணர் – அகம் 226. கழார்ப் பெருந்துறையில் ஆட்டனத்தியும், காவிரி என்பவளும் சேர்ந்து நீராடினர். ஆட்டனத்தியின் அழகினை விரும்பிய காவிரி தன் கூந்தலில் மறைத்து அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். அப்போது காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. ஆட்டனத்தி கரையில் ஒதுக்கப்பட்டுக் கிடந்தான். மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனோடு வாழ்ந்துவந்தாள்.

ஆதிமந்தி என்பவள் அரசன் கரிகாலன் மகள். அவள் ஆட்டனத்தியைக் காதலித்தாள். காதலன் ஆட்டனத்தியைக் காவிரியாறு கொண்டுசெல்லவில்லை என உறுதியாக நம்பினாள். ஊர் ஊராகத் தேடிக்கொண்டு ஆற்றோரமாகச் சென்றாள். உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான்மட்டும் கடலில் விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். - பரணர் – அகம் 222, 376,

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads