கிக்கிலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிக்கிலி (பஞ்சாபி மொழியில் கிக் - லி என்று உச்சரிக்கப்படுகிறது) கிக்லி எனும் நடனம் பஞ்சாப் பெண்களால் ஆடப்படும் நாட்டுப்புற நடனம் ஆகும்.[1] இந்நடனத்தில் இரு பெண்களும் தங்கள் கைகளை கோர்த்துக் கொண்டு ஒருவரை ஒருவர் சுற்றி சுழன்று வேகமாக வட்ட பாதையில் ஆடுவர்.[2] இவர்கள் வட்டமாக இயங்கி தங்களை சமநிலை படுத்திக் கொள்வார்கள். பொதுவாக இந்நடனம் இளம் பெண்களால் இணையாக ஆடப்படும் மேலும் இந்நடனத்தில் பல வித இசைகள் கைதட்டலோடு உபயோகப் படுத்த படும்.[3][4]

Remove ads
இது இளம் பெண்களுக்கு நடனத்தை விட ஒரு விளையாட்டு என்று கூறலாம். இரு இளம் பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எதிர் எதிராக நின்று கொண்டு கைகளை குறுக்காக நீட்டி ஒருவர் மற்றவர் கைகளை பிடித்து உடலை பின்பக்கமாக வளைத்து சரிந்து நின்று கொண்டு இருப்பர் [1][2][5] இந்த நிலையில் இவர்களின் கரம் முழுவதும் நீட்டப்பட்டு இருக்கும் அவைகள் ஒன்றொடொன்று பின்னி பிணைந்து இருக்கும். இந்நிலையில் இவர்கள் சுழன்று வட்ட இயக்கத்தில் அவர்களின் மேலாடை பறக்க கால்களின் சலங்கை ஒலிக்க சுழன்று ஆடுவர். அவர்களை சுற்றி நிற்பவர்கள் தங்கள் கரங்களைத் தட்டியும் பாடல்கள் பாடிக் கண்டும் இவர்கள் இன்னும் வேகமாக ஆட ஊக்குவிப்பர். சில நேரங்களில் இந்த நடனம் நான்கு இளம் பெண்களால் ஆடப்படும். இதோடு இணைந்து பாடப்படும் நாட்டுப்புற பாடல்கள் வேறு வேறு வகையானவை.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads