கியூலியோ நட்டா

இத்தாலிய வேதியியலாளர் From Wikipedia, the free encyclopedia

கியூலியோ நட்டா
Remove ads

கியூலியோ நட்டா (Giulio Natta: 26 பிப்ரவரி, 1903 – 2 மே, 1979) ஓர் இத்தாலிய வேதியியலாளர் ஆவார். இத்தாலியில் இம்பெரியா என்னுமிடத்தில் பிறந்தார்[1]. இவரது முந்தைய ஆய்வுகள் மெத்தனால், ஃபார்மால்டிஹைடு, பியூட்ரால்டிஹைடு மற்றும் சக்சினிக் அமிலம் ஆகியவற்றின் நவீன தொழில்துறை தொகுப்புமுறைகளுக்கான அடிப்படையை உருவாக்கியது. 1953 ஆம் ஆண்டில் இவர் பெருமூலக்கூறுகள் தொடர்பான தீவிர ஆய்வைத் தொடங்கினார். ஜீக்லரின் வினையூக்கிகளைப் பயன்படுத்தி, இவர் புரோப்பிலீனின் பலபடியாக்கல் மூலம் பரிசோதனை செய்தார் மற்றும் மிகவும் வழக்கமான மூலக்கூறு கட்டமைப்பின் பாலிப்ரோப்பிலீன்களைப் பெற்றார். இந்த பலபடிகளின் பண்புளான அதிக வலிமை, அதிக உருகு நிலை போன்றவை விரைவில் வணிகரீதியாக மிக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டது. உயர்ரக பலபடி வகைகளைக் கண்டுபிடித்ததற்காக 1963 ஆம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு பெற்றவர். கார்ல் சீக்லெர் என்பவருடன் இப்பரிசினை கியூலியோ நட்டா பகிர்ந்துகொண்டார்.[2]

விரைவான உண்மைகள் கியூலியோ நட்டா, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads