கிராம்-எதிர் பாக்டீரியா

From Wikipedia, the free encyclopedia

கிராம்-எதிர் பாக்டீரியா
Remove ads

கிராம்-எதிர் பாக்டீரியா (Gram-Negative bacteria) எனப்படுவது, கிராம் சாயமேற்றலின்போது முதன்மைச் சாயத்தை இழந்து, அதற்கு முரணான இரண்டாவது சாயத்தின் (பொதுவாக Safranin எனப்படும் சாயம்) இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும்[1]. ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு சாயமேற்றல் முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது[2]. இது கிராம்-நேர் பாக்டீரியா வகைக்கு எதிரானதாகும்.

Thumb
Pseudomonas aeruginosa எனப்படும் கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றப்பட்டு, நுணுக்குக்காட்டியில் அவதானிக்கையில் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிகின்றன

கிராம்-எதிர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் இவற்றின் கலச்சுவரைச் சுற்றி இருக்கும் ஒரு வெளி மென்சவ்வானது சாயத்தை உட்புக விடாததாக இருக்கும்[3]. அத்துடன் குறிப்பிட்ட சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycan) இங்கு மெல்லிய படலமாக மட்டுமே இருக்கும். எனவே நிறமகற்றும் அசிட்டோன் போன்ற பதார்த்தங்களில் இது நிறமகற்றப்பட்டு விடும். பின்னர் முரண் சாயமேற்றப்படும்போது, அந்த இரண்டாவது சாயத்தின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads