கிராம சபைக் கூட்டம்

நான்கு சிறப்பு நாட்களில் அரங்கேறும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.[1]

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3 படி கிராம சபை கூட்டத்திற்குதலைவர் வராத நிலையில் துணை தலைவரும், தலைவர் துணை தலைவர் இருவரும் வராத நிலையில், அக்கூட்டத்திற்கு வந்துள்ள உறுபினர்களால் விருப்பத்தேர்வு படி கூட்டத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தலைமை வகித்தல் வேண்டும்.

அரசு, குறிந்துரைக்கபடகூடிய பிற துறை அலுவலர்கள், அரசின் அறிவிக்கை வாயிலாக, இக்கிராமசபையில் கலந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும். [2][3][4]

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி, தன்னிறைவு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற முக்கிய விவாதங்கள் நடைப்பெற வேண்டும்.

கிராம சபையில் குறைந்தபட்ச கோரம் குறிப்பிடப்பட்ட உறுபினர்கள், அதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

கிராம சபையில் சராசரியான உறுபினர்கள் அனைவரும் கோரிக்கைகளை தெரிவிக்க நேரம் வழங்கப்பட வேண்டும். மேலும் கோரிக்கைகள் பெறுவதை தடை செய்வதும், கோரிகைவைபவரை பேசவிடாமல் தடுப்பதும் குற்றமாகும்.

கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் கிராமங்களில் அரசு மதுக்கடைகள் நடத்துவதை தடை செய்து தீர்மானம் இயற்றினால், அக்கிராமங்களில் அரசு மதுக்கடைக்களை திறக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.[5] [6]

Remove ads

கோரம்

கிராமச் சபைக் கூட்டத்தின் கோரம் (கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய குறைந்த பட்ச வாக்காளர்கள்), ஊராட்சி மன்றத்தின் மொத்த வாக்காளர்களில் 10% வாக்காளர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊராட்சி மன்றத்தின் மக்கள் தொகை ஏற்றவாறு கோரம் இருந்தால் கிராம சபைக் கூட்டம் நடத்தலாம். [7]

  • வாக்காளர்கள் 500 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 50 ஆகும்.
  • வாக்காளர்கள் 501 – 3,001 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 100 ஆகும்.
  • வாக்காளர்கள் 3001 – 10,000 வரை கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 200 ஆகும்.
  • வாக்காளர்கள் 10,000க்கு மேல் கொண்ட ஊராட்சியின் கிராமச் சபை கூட்டத்தின் கோரம் 300 ஆகும்.

கிராம சபைக் கூட்டத்தில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத போது, நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தின் தீர்மானங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads