கிரீன்லாந்து கடல்
கடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரீன்லாந்து கடல் (The Greenland Sea) கிரீன்லாந்தை மேற்கிலும், சுவல்பார்டு தீவுக்கூட்டத்தை கிழக்கிலும் பிராம் நீரிணை மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலை வடக்கிலும் நார்வேஜியன் கடல் மற்றும் ஐசுலாந்தைத் தெற்கிலும் கொண்ட ஒரு நீர்ப்பரப்பாகும். பொதுவாக கிரீன்லாந்து கடலானது ஆர்க்டிக் பெருங்கடலின் பகுதியாக வரையறுக்கப்படுகிறது.[3] சில நேரங்களில் அத்திலாந்திக்குக்குப் பெருங்கடலின் பகுதி எனவும் கூறப்படுகிறது.[4] இருப்பினும், ஆர்க்டிக் பெருங்கடல் பற்றிய வரையறைகள் துல்லியமற்றவையாகவோ அல்லது மனம் போன போக்கிலோ உள்ளன. பொதுவாக, ஆர்க்டிக் பெருங்கடலானது, கிரீன்லாந்துக் கடலைத் தவிர்த்ததாகும். [5] கடலியல் படிப்புகளில் கிரீன்லாந்து கடலானது நோர்வேஜியன் கடலுடன் சேர்ந்த நோர்டிக் கடலின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையிலான முக்கிய இணைப்பு நோர்டிக் கடல்களாக உள்ளன. உவர்நீர் சுழற்சியானது சாத்தியமான நேரத்தில் தடுக்கப்படுவது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் நோர்டிக் கடல்கள் பெரும்பாலும் தொகுப்பாக "ஆர்க்டிக் மத்தியதரைக்கடல்" என அழைக்கப்படுகின்றன.[6][7][8]
இந்தக் கடலானது, வழக்கமான வடதிசைக் காற்றுகளுடனும், எப்பொழுதாவது 0°C(32 °F) அளவிற்கு மேலாக உயரும் வெப்பநிலை என்றமையும் ஆர்க்டிக் காலநலையக் கொண்டுள்ளது. இந்தக கடல் முன்னதாக '''ஓடென் பனி நாக்கு''' பகுதியைக் கொண்டிருந்தது. இந்தப் பகுதியானது 72–74°N தீர்க்க ரேகைக்கு அருகாமையில் காணப்படும் கிழக்கு கிரீன்லாந்து பனி விளிம்பு வரையிலும் விரவிக்கிடந்தது, இந்தப் பகுதியே ஆர்க்டிக்கில் பனிப்பாறைகளை உருவாக்கக்கூடிய முதன்மைப் பகுதியாகும். மேற்கு பனிப்பாறைகள் கிரீன்லாந்து கடலில், ஐசுலாந்திற்கு வடக்காகவும், கிரீன்லாந்து மற்றும் ஜான் மேயன் தீவு ஆகியவற்றிற்கு இடையிலும் குளிர்காலத்தில் உருவாகிறது. இந்தப் பகுதியே யாழ் போன்ற தோற்றமுடைய கடல் நாய் மற்றும் முக்காடிட்ட வகை கடல் நாய் ஆகியவற்றின் இனப்பெருக்கத்திற்கான முதன்மைப் பகுதியாகும். இந்தப் பகுதியே கடல் நாய் வேட்டைக்கு 200 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் பகுதியுமாகும்.
Remove ads
பரப்பெல்லை
சர்வதேச நீர்ப்பரப்பு நிறுவனமானது கிரீன்லாந்தின் கடல் எல்லைகளைப் பின் வருமாறு வரையறை செய்கிறது. [9]
வடக்கில் இசுபிட்ஸ்பெர்ஜெனின் இறுதி வடமுனை மற்றும் சுவல்பர்டு இவற்றைச் சேர்க்கும் கோடு முதல் கிரீன்லாந்தின் இறுதி வடமுனை வரை.
கிழக்கில். மேற்கு இசுபிட்ஸ்பெர்ஜெனின் மேற்கு கடற்கரை.
தென் கிழக்கில். மேற்கு இசுபிட்ஸ்பெர்ஜெனின் தென்முனை மற்றும் ஜான் மேயன் தீவின் வடமுனை ஆகியவற்றைச் சேர்க்கும் கோடு மற்றும் இத்தீவின் மேற்கு கடற்கரையின் தென்முனை வரை கீழாக, அங்கிருந்து கெர்ரிட்டின் அதிகிழக்கு எல்லை வரையிலான ஒரு கோடு (67°05′N, 13°30′W) [ 65°05′N 13°30′W] ஐசுலாந்து.
தென்மேற்கில் ஸ்ட்ராவ்ம்னெஸ் (ஐசுலாந்தின் வடமேற்கு எல்லை) இலிருந்து கிரீன்லாந்தில் நான்சேன் முனைக்கு வரையப்படும் கோடு (68°15′N 29°30′W)
மேற்கில். கிரீன்லாந்தின் நான்சேன் முனை மற்றும வடமேற்கு முனை இவற்றிற்கு இடையே உள்ள கிழக்கு மற்றும் வடகிழக்கு கடற்கரை
Remove ads
வரலாறு
இந்தக் கடலானது பல்லாயிரம் ஆண்டுகளாக அறியப்பட்டிருந்தாலும் millennia,[சான்று தேவை] முதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் 1876 முதல் 1878 வரையிலான காலத்தில் தான் நார்வேஜிய் வடக்கு அத்திலாந்திக்கு ஆய்வுப்பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாகும்.[10] அப்போதிருந்து, பல நாடுகள், பெரும்பாலும் நார்வே, ஐசுலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவை இந்தப் பகுதிக்கு ஆய்வுப் பயணங்கள் நடத்தியுள்ளன. கிரீன்லாந்தின் சிக்கலான நீர் சுழற்சி அமைப்பைப் பற்றி 1909 ஆம் ஆண்டில் ஃப்ரிட்ஜாஃப் நான்சேன் என்பவரால் குறிப்பிடப்பட்டுள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads