கிருத்திகா உதயநிதி

From Wikipedia, the free encyclopedia

கிருத்திகா உதயநிதி
Remove ads

கிருத்திகா உதயநிதி (Kiruthiga Udhayanidhi), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இலக்கிய இதழான இன்பாக்ஸ் 1305 இன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.[2][3][4]

விரைவான உண்மைகள் கிருத்திகா உதயநிதி, பிறப்பு ...
Remove ads

தொழில் வாழ்க்கை

கிருத்திகா வணக்கம் சென்னை என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[5][6][7] உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடித்தனர். பிப்ரவரி 2017 இல், சந்தோஷ் நாராயணன் இசையில் "சதையை மீறி" [8] என்கிற இசைக் காணொளியை இயக்கினார். இந்தப் படைப்பு திருநர்களின் வலிகளைப் பற்றிப் பேசுகிறது. பின்னர், இவர் காளி (2018)[9][10][11][12][13] திரைப்படத்தையும், 2022 இல் Zee5 க்காக பேப்பர் ராக்கெட் என்கிற வலைத் தொடரையும் இயக்கினார்.[14] அடுத்ததாக, இவர் இயக்கிய காதல் நகைச்சுவைத் திரைப்படமான காதலிக்க நேரமில்லை ஜனவரி 2025ல் வெளியானது.[15]

Remove ads

திருமண வாழ்க்கை

இவர் பிப்ரவரி 25, 2002-இல் உதயநிதி ஸ்டாலினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர்.[16]

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் வருடம், படம் ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads