கிருஷாங்கினி
தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
க்ருஷாங்கினி என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் பிருந்தா ஆகும். இவரது கணவர் பெயர் நாகராஜன் ஆகும். இவர் கோவை மாவட்டம் தாராபுரத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் 1982 ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இவர் கானல் சதுரம் (1998), கவிதைகள் கையெழுத்தில் (2001) ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். காவ்யா பதிப்பகத்தின் வெளியீடான பறத்தல் அதன் சுதந்திரம் (2001) எனும் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பாசிரியர் ஆவார். இவர் ஓவியங்கள் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் ஒரு பெண்ணிய செயற்பாட்டாளர் ஆவார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads