கிர்க்லீசு
மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெருநகர பரோ From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிர்க்லீசு பெருநகர் பரோ (Metropolitan Borough of Kirklees) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் அமைந்துள்ள ஓர் பெருநகர பரோவாகும். இதன் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின் மதிப்பீட்டின்படி 423,000 ஆகும். இதில் பாட்லி, பிர்ஸ்டால், கிளெக்கீட்டான்,டென்பி டேல், டியூசுபரி, எக்மோன்ட்விக், ஹோல்ம்ஸ்பிர்த், அட்டர்சுபீல்டு, கிர்க்பட்டன், மார்சுடன், மேல்த்தாம், மீர்பீல்டு மற்றும் இசுலைத்வைட்டு ஆகிய குடியிருப்புப் பகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப் பெரிய குடியிருப்புப் பகுதியாக அட்டர்சுபீல்டு உள்ளது. இப்பெருநகர பரோவின் நிர்வாக மையம் அட்டர்சுபீல்டுலேயே உள்ளது.
1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த உள்ளாட்சிப் பரோ பழங்கதை நாயகன் இராபின் ஊட்டின் கல்லறை இடமான கிர்க்லீசு பிரியாரியை ஒட்டி பெயரிடப்பட்டுள்ளது.[1][2] இந்தக் கல்லறை இருந்தவிடத்தில் இன்று கிர்க்லீசு பூங்காப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads