கிறிஸ்டினா காட்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்டினா காட்சன் (ஆங்கிலம்: Christina Hodson) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் பம்பல்பீ (2018) மற்றும் பேர்ட்ஸ் ஆஃப் பிரே (2020) போன்ற படங்களில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை
காட்சன் இங்கிலாந்தில் இலண்டனில் பிறந்தார். இவர் தைவான் மற்றும் ஆங்கிலேய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் இலண்டனில் உள்ள விம்பிள்டன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.[2]
தொழில்
இவர் 2016 ஆம் ஆண்டில் பாரன் பிளாக்பர்ன் இயக்கத்தில் வெளியான 'சட் இன்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானர்.[3][4] அதை தொடர்ந்து இவர் ஜூன் 2015 இல் அகிவா கோல்ட்ஸ்மேனின் மேற்பார்வையின் கீழ் டிரான்ஸ் பார்மர்சு பிரபஞ்சத்தை விரிவுபடுத்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் குழுவில் சேர்ந்தார்.[5] பின்னர் திசம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட தலைப்பு கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட டிரான்ஸ் பார்மர்சு திரைப்படமான 'பம்பல்பீ'[6] என்ற படத்திற்கு இவர் திரைக்கதை எழுதினார். இந்த படத்தை டிராவிஸ் நைட் என்பவர் இயக்கினார்.[7]
இவர் 2020 ஆம் ஆண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்திரக்காக டிசி காமிக்ஸ் வரைகதையை மையாக கொண்டு வெளியான பேர்ட்ஸ் ஆஃப் பிரே என்ற திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதினார். அதை தொடர்ந்து டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படங்களான தி பிளாஷ்[8] மற்றும் பேட்கேர்ள்[9] ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
Remove ads
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads