கிறிஸ்டினா கிரிம்மி
அமெரிக்கப் பாடகி மற்றும் யூடியூபர் (1994–2016) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிறிஸ்டினா விக்டோரியா கிரிம்மி (Christina Victoria Grimmie, மார்ச் 12, 1994 - சூன் 11, 2016)[1] அமெரிக்க பாடகியும் பாடலாசிரியருமாவார்; என்பிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் பாட்டுப்போட்டியான தி வாய்சு நிகழ்ச்சி மூலமும் தற்கால பரப்பிசைக் கலைஞர்களின் புகழ்பெற்ற பாடல்களை மீள்பதிவாக வெளியிட்டும் பரவலாக அறியப்பட்டிருந்தார். சூன் 2011இல் இவரது அறிமுக இசைத்தட்டான ஃபைன்ட் மீ வெளியானது. அவரது கலைக்கூட இசைத்தொகுப்பு வித் லவ் 2013இல் வெளியிடப்பட்டது. இரண்டாவது இசைத்தட்டு, சைடு ஏ 2016இல் வெளியானது.
2014இல் கிரிம்மி தி வாய்சு (குரல்) தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஆறாம் பருவத்தில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் மூன்றாவதாகத் தேர்வானார். அந்த நிகழ்ச்சியில் இவருக்குப் பயிற்றுநராக இருந்த ஆடம் லெவைன் இறுதிப் போட்டியில் முடிவு என்னவாக இருந்தாலும் தாம் தமது நிறுவனத்தில் வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்திருந்தார். லில் வெய்ன் தன்னுடைய யங் மணி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தில் பாட உடன்பாடு செய்துகொள்வதாகக் கூறினார். ஐலாண்டு ரிகார்ட்சு நிறுவனத்தில் சில காலம் பணியாற்றியுள்ளார்.
சூன் 11, 2016 அன்று ஒர்லாண்டோவில் தனது இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தனது விசிறிகளுக்கு கையொப்பமிட்டுக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்ட கிரிம்மி பின்னர் மருத்துவமனையில் துப்பாக்கிக் காயங்களால் உயிரிழந்தார்.[2]
Remove ads
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads