கிறிஸ்து

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிறிஸ்து அல்லது கிறிஸ்து என்ற தமிழ்ப் பதம் கிரேக்க மொழி சொல்லான Χριστός (கிறிஸ்தோஸ்), என்ற ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளுடைய சொல்லில் இருந்து தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். இச் சொல் எபிரேய மொழிப் பதமான מָשִׁיחַ (மெசியா) என்பதன் கிரேக்க மொழிப்பெயர்ப்பாக வழங்கப்பட்டது. இது இயேசுவுக்கு புதிய ஏற்பாட்டில் வழங்கிய ஒரு புனைப்பெயராகும்.[1][2][3]

இயேசு கிறிஸ்து என பல முறைகள் விவிலியத்தில் இயேசுவின் பெயர் குறிக்கப்படுவதால்,இது சிலவேலைகளில் இயேசுவின் குடும்பப் பெயராக பிழையாக கருதப்படுவதும் உண்டு. ஆகவே இப்பெயர் "கிறிஸ்து இயேசு" என மாற்றிய வடிவிலும் பாவணையில் உள்ளது. இயேசுவை பின்பற்றியவர்கள் இயேசுவை கிறிஸ்து என நம்புகிறபடியாலேயே அவர்களுக்கு கிறிஸ்த்தவர் என்ற பெயர் உண்டாயிற்று. யூதர்கள் கிறிஸ்து இன்னமும் உலகிற்கு வரவில்லை என நம்புகின்றனர் மேலும் அவர்கள் கிறிஸ்துவின் முதலாவது வருகைக்காக காத்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களோ மாறாக கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக காத்திருக்கின்றனர்.

Remove ads

பெயரின் தோற்றம்

கிறிஸ்து என்ற பதம் புதிய ஏற்பாட்டில் கிரேக்க மொழியில் இயேசுவை விபரிக்கும் படியாக இது பயன்படுத்தப்பட்டுமையாலேயே அது தமிழில் பாவணைக்கு வந்தது. எபிரேயே மொழியில் இருந்து கிரேக்க மொழிக்கு மொழிப்பெயரிக்கப்பட்ட முதலாவது விவிலியங்களில் ஒன்றான செப்டுஅஜிண்ட் விவிலியம் மெசியாக் என்ற எபிரேய பதத்தை மொழிபெயர்க்கும் வித்ததில் பயன்படுத்தியது இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதாகும். ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பது விவிலிய நோக்கில் தலைமை குரு, தலைவர், ஆட்சியாளர் என்ற பொருளையும் கொள்ளும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads