கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்

கிளாசுக்கோவிலுள்ள ஓர் வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia

கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம்
Remove ads

கிளாசுக்கோ பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம் (Glasgow Prestwick Airport) கிளாஸ்கோவின் இரண்டாவது வானூர்தி நிலையம் ஆகும். இது கிளாசுக்கோ பெருநகரப் பகுதிகளுக்கும் வானூர்தி நிலையத்திலிருந்து வடகிழக்கில் 1 கடல் மைல் (1.9 km; 1.2 mi) தொலைவிலுள்ள[1] (கிளாசுக்கோவிலிருந்து 32 மைல்கள்) தெற்கு ஐர்சையரின் பிரெஸ்ட்விக் நகருக்கும் சேவையாற்றுகிறது.

விரைவான உண்மைகள் கிளாசுக்கோ-பிரெஸ்ட்விக் வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...

பொருண்மிய அளவில் இது இசுக்கொட்லாந்தின் இரண்டாவது பெரிய நிலையமாக இருப்பினும் பயணிகள் போக்குவரத்தின்படி, (எடின்பர்கு வானூர்தி நிலையம், கிளாசுக்கோ பன்னாட்டு வானூர்தி நிலையம், அபர்தீன் வானூர்தி நிலையங்களை அடுத்து) நான்காவது இடத்தில் உள்ளது. 2007இல் பயணிகள் போக்குவரத்து உச்சத்தை அடைந்து 2.4 மில்லியன் பேர் பயன்படுத்தினர். குறைந்த கட்டண சேவையாளர்களும் ஒப்பந்த சேவையாளர்களும் இந்த வானூர்தி நிலையத்தை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். ரயான்ஏர் என்ற குறைந்தக் கட்டணச் சேவை நிறுவனம் இதனை அடித்தளமாகக் கொண்டு தனது பறப்பு சேவைகளை இயக்குகிறது. 2013இல் குறிப்பிடத்தக்க அளவில் பயணிகள் போக்குவரத்து குறைந்து 1.1 மில்லியன் பயணிகள் கடந்து சென்றுள்ளனர்.[2]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads