கிளிநொச்சி கல்வி வலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிளிநொச்சி கல்வி வலயம் (Kilinochchi educational zone) இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் ஓர் கல்வி வலயம் ஆகும். இது இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள 12 கல்வி வலயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.[1] இக்கல்வி வலயம் தனக்கு உட்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளைப் பரிபாலித்தல், நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் பரீட்சைகள் நடாத்துதல், ஆசிரியர், அதிபர்களை நியமித்தல் போன்ற செயற்பாடுகளையும் இக்கல்வி வலயமே மேற்கொண்டு வருகின்றது. இக்கல்வி வலயத்தில் கண்டாவளை, பளை, பூநகரி, கரைச்சி என நான்கு கல்விக் கோட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இலங்கையின் நிருவாக மாவட்டமான கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒரேயொரு கல்வி வலயம் இதுவே ஆகும்.[2] இதன் தற்போதைய பணிப்பாளர் திரு. கே. முருகவேள் ஆவார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads