கிளெய்சன் ஒடுக்க வினை

இரு எசுத்தர்கள் அல்லது ஒரு எசுத்தரும் ஒரு கார்பனைல் சேர்மமும், வலுவான காரத்தின் முன்னிலையில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிளெய்சன் ஒடுக்க வினை (Claisen condensation), என்பது இரு எசுத்தர்கள் அல்லது ஒரு எசுத்தரும் ஒரு கார்பனைல் சேர்மமும், வலுவான காரத்தின் முன்னிலையில் வினை புரிந்து கார்பன் – கார்பன் பிணைப்பை உண்டாக்கும் விளைபொருளைத் தோற்றுவிக்கும் ஒரு வினையாகும் [1]. இவ்வினையின் விளைவாக ஒரு β–கீட்டோ எசுத்தர் அல்லது ஒரு β-இருகீட்டோன் கிடைக்கிறது. 1887 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்து வெளியிட்ட வேதியியலாளர் இரெய்னர் லுத்விக் கிளெய்சன் பெயராலேயே இவ்வினை அழைக்கப்படுகிறது.[2][3]

Thumb
The overall reaction of the classic Claisen condensation.
விரைவான உண்மைகள் கிளெய்சன் ஒடுக்க வினை Claisen condensation, இனங்காட்டிகள் ...
Remove ads

தேவைகள்

கிளெய்சன் ஒடுக்க வினை நிகழ வினைபொருட்களில் குறைந்தது ஒன்றாவது ஈனோலாதல் வினைக்கு உட்படுவதாக இருக்கவேண்டும். (அதாவது ஓர் ஆல்ஃபா, பீட்டா கரிமம் அணுவைப் பெற்று புரோட்டான் நீக்க வினையால் ஈனோலேட்டு அயனியாக உருவாகும் சேர்மமாக இருக்கவேண்டும். ஈனோலாதல் மற்றும் ஈனோலாதலற்ற பண்பு கொண்ட பல்வேறு வேறுபட்ட சேர்க்கை கார்பனைல் சேர்மங்கள் காணப்படுகின்றன. அவை பலவிதமான புதிய கிளெய்சன் ஒடுக்க வினைகளை உருவாக்குகின்றன.

முக்கியமாக வினையில் பயன்படுத்தப்படும் காரமானது கார்பனைல் சேர்மத்துடன் கருநாட்ட பதிலீட்டு வினை அல்லது கூட்டு வினையில் ஈடுபடாத காரமாக இருக்கவேண்டும். இந்தக் காரணத்தை முன்னிட்டு வினையில் உருவாகும் ஆல்ககாலின் இனமான சோடியம் ஆல்காக்சைடு என்ற இணைகாரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. (எடுத்துக்காட்டாக எத்தனால் விளைபொருளாகக் கிடைக்குமென்றால் சோடியம் ஈதாக்சைடு பயன்படுகிறது.) பின்னர் இதிலிருந்து ஆல்காக்சைடு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. கலப்பு கிளெய்சன் ஒடுக்க வினையில் ஒரே ஒரு சேர்மம் ஈனோலாக்கம் அடையவேண்டி இலித்தியம் டையசோ புரோபைலமைடு போன்ற கருநாட்டமல்லாத காரம் உபயோகப்படுத்தப்படுகிறது. கிளெய்சன் ஒடுக்க வினையிலும் டைக்மான் வினையிலும் மின்னாட்டமுள்ள எசுத்தர் ஈனோலாக்கம் அடைவதால் இந்த வலிமையான காரம் பயன்படுத்தப்படுவதில்லை.

Remove ads

வகைகள்

முதல்தர கிளெய்சன் ஒடுக்க வினை: இவ்வினையில் ஈனோலாகும் எசுத்தரைக் கொண்டுள்ள சேர்மத்தின் இரண்டு மூலக்கூறுகளுக்கும் இடையில் முதலில் தன்னொடுக்கம் நிகழ்கிறது.

Thumb

குறுக்கு கிளெய்சன் ஒடுக்க வினை: இவ்வினையில் ஈனோலாகும் எசுத்தரைக் கொண்டுள்ள ஒரு சேர்மம் எசுத்தர் அல்லது கீட்டோன் ஆகவும் மற்றொரு சேர்மம் ஈனோலாகாத எசுத்தர் சேர்மத்தையும் உடையதாக இருக்கும்.

Thumb

டைக்மான் ஒடுக்க வினை: இங்கு இரு எசுத்தர் குழுக்களுடன் மூலக்கூறக வினை புரிந்து β-கீட்டோஎசுத்தர்களைத் தருகின்றது இவ்வினையில் உருவாகும் வளையம் திரிபுடையாதாக இல்லாமல் கண்டிப்பாக 5- அல்லது 6-உறுப்பு வளையமாக இருக்கும்.

Thumb
Remove ads

வினை வழிமுறை

Thumb
Thumb

வினை வழிமுறையின் முதல் படிநிலையில் வலிமை மிகுந்த காரத்தின் உதவியால் ஓர் α புரோட்டான் நீக்கப்படுகிறது. இதன் விளைவாக ஈனோலேட்டு அயனி உருவாகிறது. இவ்வயனி எலக்ட்ரான்களின் உள்ளடங்காத் பண்புடன் நிலைப்புத் தன்மை பெறுகிறது.

இரண்டாவது படிநிலையில் இந்த ஈனோலேட்டு அயனி கருகவர் நாட்டத்துடன் மற்றொரு சேர்மத்தின் கார்பனைல் கார்பனை தாக்குகிறது. இதனால் ஆல்காக்சைடு குழு நீக்கப்பட்டு மீண்டும் மீள் உருவாக்கம் நடைபெறுகிறது. மற்றும் புதியதாக உருவாகும் இரட்டை α புரோட்டான்களை நீக்கி அதிக உடனிசைவு கொண்ட நிலையான எதிர்மின் அயனிகளை உருவாக்குகிறது.

இறுதி படிநிலையாக நீர்த்த அமிலம் சேர்க்கப்பட்டு ( கந்தக அமிலம் அல்லது பாசுபாரிக் அமிலம் ) ஈனோலேட்டும் எஞ்சியிருக்கும் காரமும் நடுநிலையாக்கம் செய்யப்படுகிறது. புதியாக உருவாகும் β கீட்டோ எசுத்தர் அல்லது β-இரு கீட்டோன் தனித்துப் பிரிக்கப்படுகிறது. உருவாகும் இரட்டை α புரோட்டான்கள் வெப்ப இயக்கவியல் விளைவாக மட்டுமே நீக்கப்படுகிறது. இச்செயலுக்கு விகிதசம அளவுள்ள காரமே போதுமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிளெய்சன் ஒடுக்கவினை ஒரேஒரு α ஐதரசன் கொண்டுள்ள தளப்பொருளில் நிகழ்வதில்லை ஏனெனில் வினையின் இறுதிப்படியில் β கீட்டோ எசுத்தரிலிருந்து புரோட்டான் நீக்கப்படும் உந்து விசையாலேயே வினை நிகழ்ந்து முடிகிறது.

சுடோப்பு ஒடுக்க வினை

சுடோப்பு ஒடுக்க வினை [4] என்பது கிளெய்சன் ஒடுக்க வினையிலிருந்து சற்று திருத்தப்பட்டு இருஈத்தைல் எசுத்தரின் சக்சினிக் அமிலம் வலிமை குறைந்த காரத்தின்[5] முன்னிலையில் புரியும் வினையாகும். இது பென்சோஃபீனோன் உடன் புரியும் வினை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். Thumb

ஒரு எசுத்தர் குழு மற்றும் ஒரு காபொட்சிலிக்கமிலம் குழு ஆகிய இரண்டு குழுக்களின் உருவாக்கத்தையும் ஒரு லாக்டோன் இடைநிலைப் பொருளை மையப்படுத்தி வினை வழிமுறை விளக்குகிறது.

Thumb

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads