கிழக்கு உரோமானிய மொழிகள்

From Wikipedia, the free encyclopedia

கிழக்கு உரோமானிய மொழிகள்
Remove ads

கிழக்கு உரோமானிய மொழிகள் என்பன குறுகிய பொருளில் உரோமானிய மொழிக் கூட்டத்தில் அடங்கிய விலாச் மொழிகள் என அறியப்பட்ட மொழிகளைக் குறிக்கும். இவை தென்கிழக்கு ஐரோப்பாவில் கொடும் இலத்தீனின் (Vulgar Latin) ஒரு உள்ளூர் வழக்கிலிருந்து உருவாயின.

விரைவான உண்மைகள் கிழக்கு உரோமானியம் ...
Remove ads

வரலாறு

கிழக்கு உரோமானிய மொழிகளில் இலத்தீன் உயிரெழுத்தான /i/, /ē/யுடனும், /e/யுடனும் இணைகிறது. ஆனால், /u/, /ū/வுடன் இணைகிறது. இது இம்மொழிக் கூட்டத்தை /u/, /ō/வுடனும், /o/வுடனும் இணையும் மேற்கு உரோமானிய மொழிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. தற்காலத்தில் இது மேற்கு பசிலிக்காட்டா மொழியான காசுட்டெல்மெசானோ கிளைமொழி போன்ற சில மொழிகளில் மட்டுமே காணப்பட்டாலும், ஒரு காலத்தில் இது தெற்கு இத்தாலி முழுவதும் பரந்து காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன.[1]

இப்பகுதியில் உரோமப் பேரரசின் ஆதிக்கம் இல்லாது போய்ப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், கொடும் இலத்தீனின் உள்ளூர் வழக்கு, தற்கால உரோமானிய மொழியின் பல அம்சங்களை உள்ளடக்கிய முதல்நிலை உரோமானியமாக வளர்ச்சியடைந்தது. வெளியார் ஊடுருவல்களினாற் போலும் முதல்நிலை உரோமானியம் நான்கு தனித்தனி மொழிகளாகப் பிளவுபட்டது.

  • காசுட்டெல்மெசானோ?
  • டால்மேசன்
  • விலாச்
    • டாக்கோ உரோமானியம்
    • அரோமானியம்
    • மெக்லேனிய உரோமானியம்
    • இசுத்திரிய உரோமானியம்

முதல்நிலை உரோமானியம் தோன்றிய இடம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பல வரலாற்றாளர்கள் இது சிரேசெக் கோட்டுக்குச் சற்று வடக்கே நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads