கிழங்கு

From Wikipedia, the free encyclopedia

கிழங்கு
Remove ads

கிழங்குகள் என்பவை ஒரு தாவரம் அதற்குத் தேவையான சத்துக்களையும், உணவுகளையும் சேமித்து வைத்துக் கொள்ளும் உருமாற்றமடைந்த பாகங்கள். கடுங்குளிர் மாதங்களிலோ, கடும் வெயில் காலங்களிலோ போதுமான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் போகும் போது, தமக்குத் தேவையான உணவை கிழங்குகளிலிருந்தே அத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும். அதே போல, அடுத்த பருவ காலத்திற்கு ஏதுவாய் முளைக்கவும், கலவியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் கிழங்குகள் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் தருகின்றன.[1] கிழங்குகள் ஒரு தாவரத்தின் தண்டுகளிலிருந்து முளைப்பதாக சிலரும்;[1] மாறாக அதன் வேர்களிலிருந்து முளைப்பதாக சிலரும் கருதுவார்கள்.[2]

Thumb
Oca tubers
Remove ads

தண்டுக் கிழங்குகள்

தண்டுக் கிழங்குகள் என்பவை தண்டு வேர்களிலிருந்தோ, தண்டு ஓடுகளிலிருந்தோ (stolon) வளரும் பருத்த சதைப்பற்றுள்ள பாகம் ஆகும். தண்டுக் கிழங்குகளின் மேற்புறத்திலிருந்து முதன்மைத் தண்டுகளும், இலைகளும் முளைக்கும். அதன் கீழ்ப்புறத்திலிருந்து வேர்கள் விடும். தண்டுக் கிழங்குகள் தாவரங்களில் ஒரு பக்கத்திலோ, மண்ணிற்கு நெருங்கிய இடத்திலோ முளைக்கக் கூடியவை. மண்ணுக்கு கீழே கிடக்கின்ற தண்டுக் கிழங்குகள் அதிக காலம் சத்துக்களைச் சேமித்து வைத்திருப்பதில்லை. சில தாவரங்களில் தண்டுக் கிழங்குகள் சிறுத்து விதைகள் போலக் தென்படுவதும் உண்டு. கோடை காலங்களில் தண்டுக் கிழங்குகள் சுருங்கி விடும். பின்னர் ஏதுவான நிலை வருகின்ற சமயத்தில் முளைவிடத் தொடங்கும். பிகோனியா போன்ற தாவரங்களின் தண்டுக் கிழங்குகள் பல காலத்திற்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடியவை. ஆனால் சில தாவரங்களில் இலைகள் முளைக்கின்ற வரை மட்டுமே தண்டுக் கிழங்குகள் இருக்கும். அதன் பின் சுருங்கி, காய்ந்து சருகாகிவிடுகின்றன.

உருளைக்கிழங்குகள்

உருளைக்கிழங்குகள் கூட தண்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்தவையே. அதன் தண்டு ஓடுகள் பருத்து, சேமிப்பு உறுப்புக்களாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.[3][4][5]

Remove ads

வேர்க் கிழங்குகள்

Thumb
Freshly dug sweet potato plants with tubers.

வேர்க் கிழங்குகள் என்பவை, சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்தப் பருத்த பாகங்கள் சேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன[6]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads