கீதாஞ்சலி விரைவுவண்டி

தொடர்வண்டி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் (Gitanjali Express) இந்தியாவின் இரு பெருநகரங்களான கொல்கத்தா-மும்பை இடையே தினசரி செயல்படக்கூடிய ரயில் சேவையாகும். இது மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்தினை, மகாராஷ்டிராவில் உள்ள மும்பையின் ரயில் நிலையத்துடன் இணைக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கிழக்குப் பகுதியினை, மேற்குப் பகுதியுடன் இணைக்கும் பணியினை இந்த ரயில்சேவை செய்கிறது. 12859, 12860 ஆகிய வண்டி எண்களுடன் செயல்படும் இந்த ரயில்சேவை, அதிவிரைவு சேவையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. இது மும்பையில் இருந்து ஹவுராவிற்கு செல்லும் 1968 கிலோ மீட்டர் தூரத்தினை கடக்க 30 மணி நேரமும் 30 நிமிடங்களும் தேவைப்படுகிறது. திரும்பி மீண்டும் புறப்பட்ட இடத்தினை அடைய 31 மணி நேரமும் 30 நிமிடங்களும் எடுத்துக்கொள்கிறது.

இதன் ரயில் பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு:[1] [L – SLR – GS – GS – A2 – A1 – B2 – B1 – S14 – PC – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – GS - SLR]

Remove ads

சம்பந்தப்பட்டவை

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மிகவும் பிரபலமான புத்தகம் ‘கீதாஞ்சலி’ ஆகும். இந்த ரயில் சேவையும், வங்காளத்தில் இருந்து புறப்படுவதால் கீதாஞ்சலி என்ற பெயர் பெற்றது. டிசம்பர் 26, 1977 இல் ரயில்வே அமைச்சராக இருந்த மது தான்ட்வேட், வகுப்பில்லாத ரயில்சேவையாக முதன் முதலாக கீதாஞ்சலி எக்ஸ்பிரஸைத் தொடங்கினார்.[2]

வந்தடையும் நேரமும் புறப்படும் நேரமும்

வண்டி எண் 12859[3] மும்பையில் இருந்து காலை 6.00 மணியளவில் புறப்பட்டு, அதன் இலக்கான ஹவுரா சந்திப்பினை அடுத்த நாள் மதியம் 12.30 மணியளவில் வந்தடையும். வண்டி எண் 12860, ஹவுரா சந்திப்பில் இருந்து மதியம் 1.50 மணியளவில் புறப்பட்டு, மும்பை நகரத்தினை அடுத்த நாள் இரவு 9.20 மணியளவில் சென்றடையும்.[4]

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்

மேலதிகத் தகவல்கள் எண், நிலையத்தின் பெயர் (குறியீடு) ...

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads