கீழக்குடிக்காடு தடுப்பணை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கீழக்குடிக்காடு தடுப்பணை, தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் கீழக்குடிக்காட்டில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்கமாகும். தொழுதூர் நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்படும் நீரானது இந்நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு அத்தியூர் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகின்றது.

வரலாறு

இத் தடுப்பணை 1 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2011 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.[1].

பாசன வசதி

அத்தியூர்,ஒகளூர்,கிழுமத்தூர், வயலூர், கைப்பெரம்பலூர் பகுதியில் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாசண வசதி பெறுகின்றன.

கீழக்குடிக்காடு தடுப்பணை திட்ட மதிப்பீடு

சுமார் 8 கோடியே பதினோறு இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணையானது வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[2].

அமைப்பும் கொள்ளளவும்

வெள்ளாற்றின் குறுக்கே 240 மீட்டர் நீளமும், 2.71 மீட்டர் உயரமும், மட்ட அளவு 77.210 மீட்டர் அளவும் கொண்டுள்ளது. அணையின் முன்புற அதிகபட்ச நீர் அளவு 80.390 மீட்டர், அணையின் பின்புற அதிகபட்ச நீர் அளவு 78.860 மீட்டர், அணையின் தளமட்ட நீர் அளவு 75.500 மீட்டர், அணையின் பாசனப் பரப்பு 1204.80 ஏக்கர் ஆகும்[3].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads