குங்கு முகம்மது
ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குங்கு முகம்மது புதன்புராக்கல் (Kunhu Muhammed Puthanpurakkal) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீரராவார். 1987 ஆம் ஆண்டு மார்ச்சு 5 இல் பிறந்த குங்கு முகம்மது 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.
2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய 4 × 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் குங்கு முகம்மது இடம்பெற்றிருந்த குழு வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றது. குங்கு முகம்மது, முகம்மது அனாசு, அய்யாசாமி தருண் மற்றும் ஆரோக்கிய இராசீவ் கொண்ட நால்வர் அணி நான்கு வாரங்களுக்கு முன் துருக்கியில் நிகழ்த்தியிருந்த அவர்களின் 3:02.17 சாதனையை 3:00:91 நிமிடத்தில் ஓடிமுடித்து ஒரு தேசிய சாதனையைப் படைத்தது. மேம்பட்ட இச்செயல்திறன் குங்கு முகம்மது நால்வர் அணியை உலகத்தரவரிசையில் 13 ஆவது இடத்திற்கு உயர்த்தியது [1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads