குசுத்தாவ் கிர்க்காஃப்

From Wikipedia, the free encyclopedia

குசுத்தாவ் கிர்க்காஃப்
Remove ads

குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் அல்லது குஸ்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் (Gustav Robert Kirchhoff (மாற்று ஒலிப்பு: குசுத்தாச் ராபர்ட் கிர்ச்சாஃப்), மார்ச் 12, 1824 - அக்டோபர் 17, 1887) என்பவர் செருமானிய (இடாய்ச்சுலாந்திய)இயற்பியலாளர். மின்சுற்றுக்கள், நிறமாலையியல், மற்றும் கரும்பொருள் கதிர்வீச்சல் போன்ற பல துறைகளில் இவரது பங்களிப்புகள் புகழ் பெற்றவை. 1862 ஆம் ஆண்டில் கரும்பொருள் கதிர்வீசல் குறித்து ஆய்வுகளை வெளியிட்டார். அத்துடன் மின்சுற்று மற்றும் வெப்பக் கதிர்வீசல் பற்றிய விதிகள் கிர்க்காஃபின் விதிகள் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன.

விரைவான உண்மைகள் குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப்Gustav Robert Kirchhoff, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கையும் பணியும்

கிர்க்காஃப் கிழக்கு புருசியாவில் பிறந்தவர். தந்தை பிரீடிரிக் கிர்க்காஃப் ஒரு வழக்குரைஞர். 1847 இல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார். கிளேரா என்பவரை மணந்து, பெர்லின் நகருக்குக் குடி பெயர்ந்தார்.

Thumb
கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைமானி

1845 ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை வெளியிட்டார். 1859 இல் தனது வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை முன்வைத்தார். இவ்விதிகளை அவர் 1861 இல் நிறுவிக் காட்டினார். 1854 ஆம் ஆண்டில் இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு நிறமாலையியல் குறித்து ராபர்ட் பேர்னர்என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads