குஞ்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குஞ்சு என்றால் "சிறிய" அல்லது "சிறியது" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை "குஞ்சு" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.

"குஞ்சு குருமன்கள்" என்பதும் "சின்னஞ் சிறிசுகள்" அல்லது "சின்னஞ் சிறியவர்கள்" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம்.
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில்
யாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் "என்ட செல்லம்", "என்ட குஞ்சு" என பெரியவர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.
உறவுமுறைச் சொற்கள்
யாழ்ப்பாணத் தமிழரிடையே "குஞ்சு" என்ற சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை "குஞ்சையா", "குஞ்சியப்பு", "குஞ்சையர்" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அண்மைக் காலம் வரை இருந்தது.
- சிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்
தாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; "குஞ்சம்மா", "குஞ்சாச்சி" என்றும் அழைக்கும் வழக்கு அண்மைக் காலம் வரை இருந்தது.
- சிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி
சகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; "குஞ்சித்தம்பி", "சின்னக்குஞ்சு" என அழைக்கும் வழக்கும் உள்ளது.
- சிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு
மேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் "குஞ்சு" எனும் சொற்பதம் "சிறிய" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.
Remove ads
ஆணுறுப்பு குஞ்சு
தமிழரிடையே ஆணுறுப்பிற்கு "குஞ்சு" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) "குஞ்சு" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம். தமிழ் சமுதாயத்திடையே அண்மைக்காலம் வரை, சில கிராமப்புறங்களில் தற்போதும், சிறிய ஆண் குழந்தைகள் ஆடை இன்றியே (ஆணுறுப்பு வெளியில் தெரியும் வகையில்) திரிதலைக் காணலாம். இவ்வாறான சூழ்நிலையில் சிறிய ஆண் குழந்தைகளைச் செல்லமாக அழைக்கும் முறை தோன்றி, பின்னர் பொதுவான ஒரு பெயராகத் தோன்றியிருக்கக்கூடும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads