குடியம் குகை
தமிழ்நாட்டில் உள்ள குகை, வரலாற்றுக்கு முந்தைய கல் கருவிகள் மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெ From Wikipedia, the free encyclopedia
Remove ads
குடியம் குகை (Gudiyam Cave) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ளது. இது ஒரு தொன்மையான வரலாற்றுக் குகைவாழிடம் ஆகும். சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்குகையானது தொல்லியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு ஃபூட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]


தொல்லியல் ஆய்வுச் சான்றுகளின்படி இக்குகைகள் பழைய கற்கால மனிதர்களின் வாழிடங்களாக இருந்தவையெனக் கருதப்படுகின்றன. இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் இவ்விடம் 1962-64 ல் அகழ்வாய்வு செய்யப் பட்டது.[2] சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஹோமோ எரக்டஸ் என்னும் தொல் மாந்தர் வாழ்ந்தான் என்பதை பழங்கற்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். பூண்டிக்கு அருகிலுள்ள அல்லிக்குளி மலைத் தொடர்களில் இந்திய தொல்லியல் துறையால் இதுபோன்ற பதினாறு தங்கு குகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இக்குகை குறித்து ரமேஷ் யந்த்ரா இயக்கிய ஆவணப்படம் குடியம் குகைகள் என்ற ஆவணப்படம் [3] கேன்ஸ் திரைப்பட விழா, 2015 இல் திரையிடப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. [4] [5]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
