குடும்ப ஓய்வூதியம் (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியாவில் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) என்பது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு, பொருளாதார நலன் கருதி அரசால் மாதாமாதம் வழங்கப்படும் ஒரு ஈட்டுத் தொகையாகும்.

குடும்ப ஓய்வூதியம் கணக்கிடுதல்

அரசு ஊழியர்/ஆசிரியர் இறுதியாக பெற்ற அடிப்படை ஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் சிறப்பு ஊதியம் (Special Pay) ஆகியவற்றின் கூட்டுத்தொகையில் 30 விழுக்காடும் மற்றும் அதற்குரிய அகவிலைப்படியும் (Dearness Allowance) குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. எனினும் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 3050 வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதிற்கானத் தகுதிகள்

  • சாதாரணக் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 3050/- பெறுவதற்கு அரசு ஊழியர்/ஆசிரியர் குறைந்தபட்சம் ஒரு வருட பணிக்காலம் அல்லது 9 மாதமும் அதற்கு மேலும் தொடர்ச்சியான பணியில் இருந்திருக்க வேண்டும்.
  • அதிகரிக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு ஏழு வருடம் பணியில் (அல்லது 6 ஆண்டு 9 மாதமும் அதற்கு மேலும்) தொடர்ச்சியாக பணியில் இருந்திருக்க வேண்டும்.
  • மருத்துவத் தகுதிச் சான்றிதழ் துவக்கத்தில் தாக்கல் செய்திருந்தால் 9 மாத பணிக்காலத்திற்குள் இறந்தாலும் குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் உண்டு.
Remove ads

யாருக்கு குடும்ப ஓய்வூதியம்

  • இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் கணவன் அல்லது மணைவி (மறுமணம் செய்து கொள்ளாத வரை) வாழ்நாள் முழுக்க வழங்கப்படும்.
  • கணவன்/மனைவியை இழந்த ஊழியர்/ஆசிரியர் அல்லது ஓய்வூதியரின் மகனுக்கு 25 வயது அடையும் வரை குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • அரசு அணை எண். 325, நிதித்துறை, நாள் 28-11-2011-ன் படி இறந்த அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியரின் திருமணமாகாத/விவாகரத்தான/விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எப்பணியும் செய்ய இயலாத உடல் ஊனமுற்ற மகன்களுக்கு இருந்தால், அவர்களின் வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • திருமணமாகாத அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் ஊழியரின் தந்தை அல்லது தாயார் அல்லது திருமணமாகாத 25 வயதுக்குட்பட்ட சகோதரர் அல்லது சகோதரி ஆகியவர்களில் ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதியத்திற்கான பொது விதிகள்

  • கணவனும் மனைவியும் அரசு ஊழியர்/ஆசிரியராக இருந்து, ஒருவர் இறந்தால் மற்றவருக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
  • கணவனும் மனைவியும் இருவரும் அரசு ஊழியர்/ஆசிரியராக அல்லது ஓய்வூதியராக இருந்து, இருவரும் இறந்தாலும் தகுதியுள்ள குழந்தைகளுக்கு இரண்டு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.
  • அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியர் காணாமல் போனால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து ”முதல் தகவல் அறிக்கை” (FIR) நகல் பெறவேண்டும். பின் கண்டுபிடிக்க இயலாத நிலையில் “தகவல் கிடைக்கப் பெறவில்லை” என்ற ஆணையை நீதிமன்றம் மூலம் பெற வேண்டும். காணாமல் போன ஊழியர் அல்லது ஓய்வூதியரின் சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெற்று, குடும்ப ஓய்வூதியத்திற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.
  • ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதிய பட்டுவடா ஆணை (Pension Payment Order Book) புத்தகம் காணாமல் போனால், அரசாணை எண் 30, நிதித்துறை (ஓய்வூதியம்), நாள் 01-02-2010-இன் படி, காவல் துறையில் புகார் அளிக்காமலேயே டூப்ளிகேட் ஓய்வூதிய பட்டுவடா ஆணை புத்தகத்தை (Duplicate Pension Payment Order Book) உரிய கருவூலம் மூலம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
Remove ads

குடும்ப ஓய்வூதியம் யாருக்கு பொருந்தாது

01-01-2004 முதல் இந்திய நடுவண் அரசுப் பணியில் சேர்ந்த, இந்திய அரசின் முப்படை மற்றும் துணை இராணுவப் படையில் பணிபுரிபவர்கள் தவிர மற்ற அனைத்து ஊழியர்கள், கல்வி நிறுவன ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பொருந்தாது. 01-04-2003 முதல் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கும், கல்வி நிறுவன ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், உள்ளாட்சி நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பொருந்தாது. இவ்வூழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.[1][2].

Remove ads

பங்களிப்பு ஓய்வூதிய திட்டப்படி குடும்ப ஓய்வூதியம்

01-01-2004 முதல் இந்திய நடுவண் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கும், 01-04-2003 முதல் தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப்படி குடும்ப ஓய்வூதியம் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வந்துள்ளன. (ஆனால் இந்திய அரசின் முப்படையில்/துணை நிலை இராணுப்பணியில் பணி புரிபவர்களுக்கு மட்டும் பழைய திட்டப்படி குடும்ப ஓய்வூதியம் உண்டு).

ஆதாரம்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads