குட்டிக்கானம்

கேரளத்தின், இடுக்கி மாவட்ட சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

குட்டிக்கானம்map
Remove ads

குட்டிக்கானம் (Kuttikkanam) என்பது ஒரு மலை வாழிடமாகும். இது கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடிகள் (1,100 m) மேலே பசுமையான தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இது பீர்மேடு எல்லைக்குள் உள்ளது. காஞ்சிரப்பள்ளி மற்றும் முண்டக்காயம் ஆகியவை அருகிலுள்ள நகரங்கள்.

விரைவான உண்மைகள் குட்டிக்கானம், நாடு ...
Remove ads

வரலாறு

16 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதி சங்கனாச்சேரி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது, என்றாலும் இது மக்கள் வசிக்காத பகுதியாக இருந்தது. 1756 ஆம் ஆண்டில், திருவாங்கூர் சங்கனாச்சேரியைக் கைப்பற்றி, தன்னுடைய மேலாதிக்கத்தை கொண்டுவந்தது. சர்ச் மிஷன் சொசைட்டி சமயபரப்பாளர் ஹென்றி பேக்கர், காபி தோட்டங்களைத் தொடங்கினார், ஸ்ரீ மூலம் திருநாளின் ஆட்சியின்போது இவை தேயிலைத் தோட்டங்களாக மாறின.

இந்தியாவில் பிரித்தானிய பேரரசின் கீழ், குட்டிக்கானம் ஒரு உயர்ந்த சந்தை பொழுதுபோக்கு இடமாக மாறியது. முதலில் சாலை இல்லை, ஆனால் ஒரு பாதை மட்டுமே இருந்ததால், திருவாங்கூர் இராஞ்சியத்தின்மா முதல் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமான ஏரியல் ரோப்வே லிமிடெட்டை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைகால அரண்மனை குட்டிக்கானத்தில் அமைந்துள்ளது.

பிரித்தானியர் காலத்திலும் அதற்குப் பின்னரும், கேரளம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குட்டிக்கானத்திற்கு மனிதவளம் கொண்டு வரப்பட்டது. இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சந்ததியினர் குட்டிக்கானத்தின் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் ஆவர்.

Remove ads

சுற்றியுள்ள பகுதிகள்

  • பீரு ஹில்ஸ். சுமார் 1   கி.மீ தூரம்.
  • கிரம்பி. பொதுவாக பருந்துப்பாறை என்றும் அழைக்கப்படுகிறது, இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,800 அடிகள் (1,200 m) மேலே உள்ளது.
  • தோட்டுப்புரா. திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் ஆயுதங்களை சேமித்து வைத்த இடம்.
  • பேக்கர் ஹில்ஸ் (வணிக ரீதியாக திரிசங்கு மலைகளுக்கு இடப்பட்ட பெயர்).
  • பாஞ்சலிமேடு, ஒரு கட்சி முனை, புராணத்தின் படி, பாண்டவர்கள் மற்றும் பஞ்சாலியின் பல மறைவிடங்களில் ஒன்றாகும்.   பஞ்சலிக்குளம் என்று அழைக்கப்படும் ஒரு குளத்திலிருந்து "மகரஜோதி", சபரிமலையில் புனித யாத்திரை காலத்தில் தெய்வீக சுடர் எரிந்தது.
  • வலஞ்சங்கனம் அருவி என்பது குட்டிகானத்தில் மனதைக்கவரும் இடம். இது நின்னுமுல்லிப்பாரா என்றும் அழைக்கப்படுகிறது. குட்டிக்கனத்தின் முக்கிய ஈர்ப்பு. இந்த அருவி சுமார் 75 அடி (23 m) உயரத்தில் இருந்து விழுகிறது. மேலும் இது பொதுவாக மூடுபனியால் மூடப்பட்டிருக்கும்.
  • நல்லதண்ணி காட்சிமுனை. கோட்டயம்-குமிளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
  • செயற்கை காடு. 100 ஏக்கர்கள் (0.40 km2) பரப்பளவிலான அடர்த்தியான பைன் காடு. இங்கு அருகிய இன விலங்குகள் உட்பட 30 வகையான பறவைகள் உள்ளன . கேரள வன மற்றும் வனவிலங்குத் துறையால் இது இடையக மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • அழுதாசு நீர் திருப்பல் திட்டம். 987 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு தண்ணீரை திருப்ப, அழுதா ஆற்றில் கேரள அரசு நிறுவிய திட்டம்.
Thumb
குட்டிக்கானத்தில் ஒரு மாலை நேரம்
Remove ads

கல்வி நிறுவனங்கள்

  • மரியன் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
  • மரியன் கல்லூரி குட்டிக்கானம்
  • மார் பசெலியோஸ் கிறிஸ்டியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குட்டிகானம்
  • ஐ.எச்.ஆர்.டி கல்லூரி குட்டிக்கானம்
  • புனித பியஸ் எக்ஸ் ஆங்கிலப் பள்ளி குட்டிகானம்
  • குட்டிகானம் புனித ஜோசப் மலையாள துவக்கப்பள்ளி
  • அரசு மாதிரி உறைவிடப் பள்ளி (ஜி.எம்.ஆர்.எஸ்), குட்டிகானம்
  • ஆயுர்வேத நர்சிங் மற்றும் பஞ்சகர்மாவின் சஹாயத்ரி நிறுவனம்
  • மரியகிரி ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி, குட்டிகானம்

படவரிசை

புத்தகங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads