குட்டிப்புரம் தொடருந்து நிலையம்
கேரளத்தில் உள்ளள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குட்டிப்புரம் தொடருந்து நிலையம் (Kuttippuram railway station, குறியீடு: KTU) என்பது கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தின் பாலக்காடு தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது. [1]
Remove ads
வரலாறு
குட்டிப்புரத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்களில் ஒன்றான திரூர் தொடருந்து நிலையமானது கேரத்தின் பழமையான தொடருந்து நிலையம் ஆகும். [2] திரூரில் இருந்து பேப்பூர் வரையிலான இருப்புப் பாதை மாநிலத்தின் பழமையான இருப்புப் பாதையாகும், இது தானூர், பரப்பனங்காடி மற்றும் வள்ளிக்குன்னு தொர்ருந்து நிலையங்களையும் கொண்டுள்ளது. [2] திரூர் - பேப்பூர் தொடருந்து பாதை 1861, மார்ச் 12 இல் செயல்படத் தொடங்கியது. [3] அதே ஆண்டில், திருரூரில் இருந்து குட்டிப்புரம் வரை திருநாவாய் வழியாக இருப்புப் பாதை அமைக்கப்பட்டு, 1861 மே முதல் நாளில் இருந்து செயல்படத் தொடங்கியது [2] குட்டிப்புரம் தொடருந்து நிலையம் மாநிலத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். [2] பின்னர் 1862 இல், குட்டிப்புரத்தில் இருந்து பட்டாம்பி வரை இருப்புப் பாதை விரிவுபடுத்தப்பட்டது, பின்னர் அது மீண்டும் அதே ஆண்டில் பட்டாம்பியில் இருந்து போத்தனூர் வரை விரிவாக்கப்பட்டது. [2] பின்னர் 1861-1862 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பேப்பூர் - போதனூர் பாதையின் விரிவாக்கமாக சென்னை - மங்களூர் இருப்புப் பாதை உருவாக்கப்பட்டது. [2]
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads