குட்டிமணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்[1] (இறப்பு: சூலை 25, 1983) என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். இவர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார். கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடனும் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்.[2]
Remove ads
இளமைக் காலம்
யோகச்சந்திரன் வல்வெட்டித்துறையில் செல்வராஜா - அன்னமயில் ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.
ஆரம்பகால நடவடிக்கைகள்
குட்டிமணி 1970களில் தங்கத்துரையுடன் சேர்ந்து இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்ற இயக்கங்களின் வெற்றியினால் உந்தப்பட்டு யோகச்சந்திரன் 1979 இல் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்தார். விரைவில் இவ்வியக்கம் விடுதலைப் புலிகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும் இயக்கமாக உருவெடுத்தது.[3]
1981 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, யோகன் உட்படப் பலர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads