குதம்பைச்சித்தர்

From Wikipedia, the free encyclopedia

குதம்பைச்சித்தர்
Remove ads

தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர்.

Thumb
குதம்பைச்சித்தர்

குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துகளைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால் குதப்பும் (சொதப்பும்) மனத்தைத்தான் குதம்பை என்கிறார். இவரது பாடல்கள் 33 உள்ளன.

பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.

வெட்டவெளிதான் மெய்மைநிலை[1]

ஞானி மெயப்பொருளைக் காணவேண்டும்[2]

ஞானி முத்தமிழைக் கற்று அதனைத் தழுவ வேண்டும்[3]

ஆனந்தம் பொங்கி அளவோடு இருக்கவேண்டும்[4] என்பன போன்ற கருத்துக்களை இவர் வாரி வழங்கியுள்ளார்.

இவரது பாடல்களில் சில இரட்டுற மொழிதலாக அமைந்துள்ளன.[5] இவரின் ஜீவ சமாதி எனப்படும் உயிர்க்கோயில் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையில் மயூரநாதர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது

Remove ads

அடிக்குறிப்புகள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads