குதிரைக்குக் காணம் காட்டல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குதிரைக்குக் காணம் காட்டல் என்பது கரணம் போட்டுக் காலால் பந்து எறிந்து விளையாடும் அணி விளையாட்டு. காணம் என்பது கொள்.

Thumb
குதிரைக்குக் காணம் காட்டல் - விளையாட்டு அரங்கம்

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல சுமார் 15 அடி இடைவெளி விட்டுக் கோடு போட்டுள்ள விளையாட்டுத் திடல். துணியில் திரித்த பந்து ஒன்றைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் ஒரு அணியிலிருந்து ஒருவர் வீசுவார். அவ்வாறு வீசும்போது காலோ, கையோ தன் எல்லைக் கோட்டைத் தாண்டவோ, தொடவோ கூடாது. வீசிய பந்து எதிரணியினர் எல்லைக்கோட்டைத் தாண்டி விழவேண்டும். விழாவிட்டால் ஆட்டத்தை இழப்பார். துணிப்பந்து தரையில் விழுவதற்கு முன்பு எதிரணியினர் பிடித்துவிட்டாலும் ஆட்டம் பறிபோகும். அத்துடன் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம்.

Remove ads

பாடல்

குதிரை ஏறியவரும், குதிரையானவரும் மாறி மாறி உரையாடும் பாடல் பாடுவர்.

மேலதிகத் தகவல்கள் குதிரையானவர், சவாரி செய்பவர் ...

குதிரையானவர் எழுந்துவிடுவார். சவாரி முடிந்துவிடும். அடுத்த ஆட்டம் தொடரும்.

Remove ads

மேலும் பார்க்க

கருவிநூல்

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1954
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads