குன்னத்தூர், மதுரை மாவட்டம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குன்னத்தூர் என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், குன்னத்தூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1] இக்கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 156 மீட்டர் உயரத்தில், 9.8938°N 78.2573°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு குன்னத்தூர் அமையப் பெற்றுள்ளது. குன்னத்தூர், மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில், மதுரை - சிவகங்கை மாநில நெடுஞ்சாலை எண் 33 அருகே, வரிச்சியூர் - களிமங்கலம் செல்லும் மாவட்டச் சாலையில் அமைந்துள்ளது. அருகமைந்த கிராமங்கள் ஆளவந்தான், வரிச்சியூர், களிமங்கலம், பூவந்தி, நாட்டார்மங்கலம், செங்கோட்டை, இடையப்பட்டி ஆகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625201; தொலைபேசி குறியீடு எண் (Std Code) 04549 ஆகும்.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, குன்னத்தூர் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1,307 ஆகும். அதில் ஒடுக்கப்பட்டோர் 180 (13.77%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 71.26% ஆகும். குன்னத்தூரில் 335 வீடுகள் உள்ளது. [2]
குன்னத்தூர் சமணர் குடைவரைகள்
குன்னத்தூர் கிராமத்தின் சிறு மலை மீது, கிபி 9 - 10ம் நூற்றாண்டு காலத்திய சமணர் படுகைகளும், தமிழி கல்வெட்டுகளும், வட்டெழுத்துகளும், கிழக்கு நோக்கிய உதயகிரீஸ்வர் கோயிலும், மேற்கு நோக்கிய அஸ்தகிரீஸ்வரர் குடைவரைக் கோயில்களும் உள்ளது.[3] [4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads