குமரிமுத்து
முன்னாள் தமிழ்த் திரைப்பட நடிகர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமரிமுத்து (Kumarimuthu; 20 திசம்பர் 1940 – 28 பிப்ரவரி 2016) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏறத்தாழ 1000 திரைப்படங்களில் நடித்தவர்.[2]. பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தினார்.
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் காட்டுப்புதூரில் தமிழ் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவர்.
தொழில்
குமரிமுத்து தனது தொழில் வாழ்க்கையில் மூன்று தலைமுறையாக 728 படங்களில் நடித்தார். இவர் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வர்த்தக முத்திரை சிரிப்பால் அறியப்பட்டார். இவர் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அரசியல் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.
குமரிமுத்து நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். நில குத்தகை மற்றும் கட்டடம் இடிப்பு பிரச்சனை கேள்விக்குட்படுத்திய பிறகு, சங்கத்தை பற்றி எதிர்மறையாக பேசிய குற்றச்சாட்டின் பேரில் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.
Remove ads
மறைவு
நடிகர் குமரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக 2016 பிப்ரவரி 29 அன்று தனது 75ஆவது வயதில் சென்னையில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads