குமார் கார்த்திகேயா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குமார் கார்த்திகேயா (Kumar Kartikeya)(பிறப்பு 26 திசம்பர் 1997) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மத்தியப் பிரதேசத்தையும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1] குமார் 26 செப்டம்பர் 2018 அன்று விஜய் ஹசாரே துடுப்பாட்டப் போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காகத் தனது ஏ தரப் போட்டியில் அறிமுகமானார்.[2] இதைத் தொடர்ந்து, இவர் 2018 நவம்பர் 28 அன்று ரஞ்சிக் கோப்பையில் மத்தியப் பிரதேசத்திற்காக அறிமுகமானார்.[3] கார்த்திகேயா 2019 மார்ச் 2 அன்று சையத் முசுடாக் அலி கோப்பைக்கான போட்டியில் மத்தியப் பிரதேசத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[4]
ஏப்ரல் 2022-இல், அர்சத் கான் காயம் காரணமாக விலகிய பின்னர், 2022 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் அர்சத் கானுக்குப் பதிலாகக் கார்த்திகேயா விளையாடினார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads