குமார் மங்கலம் பிர்லா

இந்தியத் தொழிலதிபர் From Wikipedia, the free encyclopedia

குமார் மங்கலம் பிர்லா
Remove ads

குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) (பி) ஜூன் 14 1967 இவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர்[2][3]. பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராகவும், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.

விரைவான உண்மைகள் குமார் மங்கலம் பிர்லா, பிறப்பு ...
Remove ads

கல்வி

மும்பைப் பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றார். இலண்டனில் மேலாண்மைப் படிப்பும் முடித்தார். மேலும் பட்டயக்கணக்காளராகவும் ஆனார்.

பணி

குமார் மங்கலம் பிர்லாவின் தந்தையார் ஆதித்ய பிர்லா திடுமென இறந்ததால் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் பொறுப்பை 1995ஆம் ஆண்டில் தம் 28 ஆம் அகவையில் ஏற்றுக்கொண்டார்.இவருடைய தலைமையில் ஆதித்யா குழுமம் பல மடங்கு வளர்ச்சிக் கண்டுள்ளது. இவர் பொறுப்பேற்றபோது குழுமத்தின் விற்றுமுதல் 200 கோடி தாலராக இருந்தது. ஆனால் இப்பொழுதோ 4000 கோடி தாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் பிறநாடுகளிலும் உள்ள 26 நிறுவனங்களை இணைத்துள்ளார்.

Remove ads

பதவிகள்

ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் உறுப்பினராகவும் செபியின் நிறுவனங்களை நிருவகிக்கும் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார். வணிகம் தொடர்பான ஆலோசனைகளைப் பிரதமருக்கு வழங்கும் குழுவிலும் இடம் பெற்றார்.

விருதுகள்

நாசுகாம், பிசினஸ் டுடே, பிசினஸ் இந்தியா, போர்ப்ஸ்,எகானமிக்ஸ் போன்ற இதழ்களும் பிற நிறுவனங்களும் குமார் மங்கலம் பிர்லாவுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்துள்ளன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads