கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோவில்

இந்தியாவில் கோவில் From Wikipedia, the free encyclopedia

கும்பகோணம் ராஜகோபாலசுவாமி கோவில்map
Remove ads

ராஜகோபாலசுவாமி கோயில் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு விஷ்ணுக் கோயிலாகும்.

விரைவான உண்மைகள் ராஜகோபாலசுவாமி கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

இக்கோயில் கும்பகோணத்தின் பெரிய தெருவின் வடக்கில் அமைந்துள்ளது.

மூலவர்

இக்கோயிலின் பிரதான தெய்வம் (மூலவர்) விஷ்ணுவின் வடிவான ராஜகோபாலசுவாமி ஆவார். தாயார் செங்கமலவள்ளி நாச்சியார்.[1]

இதே பெயரில் இன்னுமோர் கோவில் கும்பகோணத்தில் தொப்புத் தெருவில் அமைந்துள்ளது.[2]

சிறப்பம்சம்

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் மகாமகத்துடன் தொடர்புடைய ஐந்து விஷ்ணு கோயில்களில் ராஜகோபாலசுவாமி கோயிலும் ஒன்று.[1]

கருடசேவை

கருடசேவை இக்கோயிலின் பிராதான விழாக்களில் ஒன்றாகும்.[1]

மகாசம்புரோக்ஷணம்

மகாசம்புரோக்ஷணம் எனப்படும் இக்கோயிலின் கும்பாபிஷேகம் 19 ஜூன் 2015 அன்று நடந்தேரியது.[3]

இவற்றையும் பார்க்க

தரவுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads