கும்பேசர் குறவஞ்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்பேசர் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான குறவஞ்சி வகையைச் சேர்ந்த நாடக நூல்.
இயற்றியவர்
கும்பேசர் குறவஞ்சி நாடகத்தை இயற்றியவர் பாபநாச முதலியார் என்பதை நூலின் பாயிரம் மூலமாக அறிந்துகொள்ளலாம். பாபநாச முதலியார் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது வாழ்க்கை குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.[1]
மூன்று கீர்த்தனைகள்
இவர் இயற்றிய மூன்று கீர்த்தனைகள் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு அமையும்.[1]
- நடமாடித் திரிந்த - காம்போதி - கண்ட சாபு
- முகத்தைக் காட்டி - பைரவி - மிஸ்ர சாபு
- பேரும் நல்ல த்யாகர் - பூர்வகல்யாணி - மிஸ்ர சாபு
காலம்
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னரான ஏகோஜி காலத்தில் இக்குறவஞ்சி இயற்றப்பட்டது.
சிறப்பு
இவர் பாடல்கள் ராக பாவம் ததும்ப உள்ளன. தாளங்களும் சாதாரணமாகப் புழக்கத்திலுள்ள ஆதி தாளத்தில் இல்லாமல் சாபு தாளங்களில் அமைந்துள்ளன. இவை பழிப்பது போலப் புகழும் நிந்தாஸ்துதி என்னும் வகையில் உள்ளன. இவருடைய படைப்பான கும்பேசர் குறவஞ்சி குறவஞ்சிகளுக்கே உரிய முத்தமிழ் ஆட்சியோடு இவருடைய தனி முத்திரைகளையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புகள் காரணமாக இவர் முத்தமிழ்க் கவிராஜ சேகரர் என்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads