குருநானக் ஜெயந்தி

From Wikipedia, the free encyclopedia

குருநானக் ஜெயந்தி
Remove ads

குருநானக் ஜெயந்தி அல்லது குருநானக் குருபூரப், முதல் சீக்கிய குரு, குருநானக் பிறந்ததைக் கொண்டாடுகிறது.[1][2] இது சீக்கியர்களின் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும்.[3] சீக்கிய மதத்தில் கொண்டாட்டங்கள் சீக்கிய குருக்களின் ஆண்டு விழாவைச் சுற்றி வருகின்றன. குருபூரப் என அழைக்கப்படும் அவர்களின் பிறந்தநாள் சீக்கியர்களிடையே கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைக்கான நாட்களாகும்.

விரைவான உண்மைகள் குருநானக் ஜெயந்தி, அதிகாரப்பூர்வ பெயர் ...
Remove ads

பின்னணி

Thumb
குருநானக்கின் பிறப்பு

சீக்கிய சமய நிறுவனரான குருநானக், 1469 இல், விக்ரம் சம்வத் நாட்காட்டியின்படி கட்டக் மாதம் பௌர்ணமி நாளன்று பிறந்தார். அவர் பிறந்த இடம் தற்போது நங்கானா சாகிபு , பாகிஸ்தானில் உள்ளது.[4] இது இந்தியாவின் சில பகுதிகளில் அரசு விடுமுறை ஆகும்.[5] சீக்கியர்கள் குருநானக்கின் இந்த பிறந்தநாள் விழாவை நவம்பர் மாதத்தில் காலம்தொட்டு கொண்டாடி வருகின்றனர்.[1][6]

கொண்டாட்டம் மற்றும் சடங்குகள்

இந்த கொண்டாட்டம் பொதுவாக அனைத்து சீக்கியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்; கீர்த்தனைகள் மட்டும் மாறுபடலாம். கொண்டாட்டங்கள் பொதுவாக பிரபாத் பெரிஸுடன் தொடங்கும். பிரபாத் பெரிஸ் என்பது குருத்வாராக்களில் தொடங்கி, பாடல்களைப் பாடி உள்ளூர்களைச் சுற்றிச் செல்லும் அதிகாலை ஊர்வலங்கள் ஆகும். பொதுவாக, பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அகண்ட பாதை (சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் ஐ நாற்பத்தெட்டு மணிநேர இடைவிடாத வாசிப்பு) குருத்துவார்ல் நடத்தப்படுகிறது.[7] பிறந்தநாளுக்கு முந்தைய நாள், நகர்கீர்த்தன் என்று அழைக்கப்படும் ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் "பஞ்ச் பைரஸ்" (ஐந்து அன்பானவர்கள்) தலைமையில் நடைபெறுகிறது.[8][9][10] குருகிரந்த் சாகிபின் பல்லக்கு (பல்கி) மற்றும் கொடி (நிசான் சாகிபு) ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள்.[11]அவர்களைத் தொடர்ந்து பாடகர்கள் பாடல்களைப் பாடுகிறார்கள். கட்கா குழுக்கள் பல்வேறு தற்காப்புக் கலைகள் மூலமாகவும், பாரம்பரிய ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தங்கள் வாள்வீச்சு திறனை வெளிப்படுத்துகின்றனர். ஊர்வலம் ஊர் தெருக்களில் செல்லும். இந்த சிறப்பு சந்தர்ப்பத்திற்காக, பாதை பதாகைகளால் மூடப்பட்டிருக்கும் மற்றும் வாயில்கள் கொடிகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டும். குருநானக்கின் செய்தியைப் சமய தலைவர்கள் போதிப்பனர்.[9][8]

திருவிழா நாளில், கொண்டாட்டங்கள் அதிகாலை 4 மணிக்கு ஆரம்பமாகின்றன. நாளின் இந்த நேரம் "அமிர்த காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. "ஆசா-கி-வார்" (காலை பாடல்கள்) பாடலுடன் நாள் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து குருவின் புகழ் கதை (வேதத்தின் வெளிப்பாடு) மற்றும் கீர்த்தன் (சீக்கிய வேதங்களிலிருந்து பாடல்கள்) மூலம் போற்றப்படும். அதைத் தொடர்ந்து, லங்கர என்ற சிறப்பு சமூக மதிய உணவு, தன்னார்வலர்களால் குருத்வாராக்களில் ஏற்பாடு செய்யப்பட்டும்.[8][12] சில குருத்வாராக்களில் இரவு பிரார்த்தனை அமர்வுகள் நடத்தப்படுகின்றன, அவை சூரிய அஸ்தமனத்தில் ரெஹ்ராஸ் (மாலை பிரார்த்தனை) ஓதப்படும்போது தொடங்குகின்றன, அதைத் தொடர்ந்து கீர்த்தனை மற்றும் இரவு சுமார் 1:20 மணிக்கு சபை குர்பானி தொடங்குகிறது.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads