குறியிறையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

குறியிறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். ஓடி விளையாடும் சின்னஞ்சிறு புதல்வர்களை இப்புலவர் 'குறியிறைப் புதல்வர் என்று குறிப்பிடுகிறார். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர்[1] இவருக்குக் குறியிறையனார் என்று அவரது பாடலிலுள்ள தொடரைக்கொண்டு பெயர் சூட்டியுள்ளார்.

குறுந்தொகை 394 தரும் செய்தி

தலைவன் குற்றமில்லாதவன் என்று பசப்பித் தோழி தலைவியின் துன்பத்தைப் போக்க முயல்கிறாள். தலைவி ஒப்புக்கொள்ளவில்லை. அவன் தனக்குப் பகையாயின பாங்கை இயற்பழித்துக் கூறுகிறாள்.

குறியிறை

சின்னஞ்சிறு ஆண் குழந்தைகள் எழுந்து நடக்கும் பருவத்தில் ஆடையின்றித் திரிவர். அக் குழந்தை தன் ஆண்குறியைத் தானே தொடாமல் இருப்பதற்காக அதன் அரைஞாண் கயிற்றில் சில தொங்கல்களைக் கோத்திருப்பர். குழந்தை அதனைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். தன் குறிகளைத் தொடாதிருக்க அரைஞாணில் தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தத் தொங்கலுக்குக் குறியிறை என்று பெயர்.

உவமை

யானைக் குழவி சிறிதாக இருக்கும்போது சின்னஞ்சிறு பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடும். அதுவே பெரிதான பிறகு அவர்களும் பெரியவர்கள் ஆகி அவர்கள் விதைத்த தினையை மேயும் பகையாக மாறிவிடும். அதுபோலத் தலைவன் தலைவியோடு நகைத்துக்கொண்டு விளையாடிய காதல் விளையாட்டு பகையாக மாறிவிட்டதாம்.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads